பக்கம்:தாயுமானவர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருவருள் பெற்றமை స్థ 11 స్థ அடிகள் எந்நாட்கண்ணி குரு மரபின் வணக்கத்துள் கயிலாய பரம்பரை மெய்கண்டார் சந்தானத்தை விதந்தோதிக் குறித்த பதிகத்தின் பிற்பகுதியில் மெளனகுரு வணக்கத்தை ஆறு கண்ணிகளில் கூறினமையும் திருமூலரைக் குரு மரபிற் கூறாமையும் காணலாம். 'மூலன் என்ற சொல் இறைவனைக் குறிப்பதற்குத் திருமூலரால் வழங்கப் பெற்றுள்ளது. மூ லனை நாடினோம்' என்ற வாக்கினால் இது தெளியப்படும். தாயுமானவர் யோகஞான முறைகளைக் கேட்ட அன்று முதல் சித்தாந்த நூல்களைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல், திட்டை கூடல் என்னும் நான்கினையும் மேற்கொண்டு கல் லால் அடிக்கீழ் வைகும் முதல்வன் திரு முன்பு ஒன்றுபடுதலா கிய நிட்டைப் பயிற்சி செய்து வருவாராயினர். இக்காலத்தில் தான் திருவருள் விலாசப் பரசிவ வணக்கம்', 'பொருள் வணக் கம், பரிபூரணானந்தம் என்ற தலைப்பில் பாடல்களைப் பாடினர். சின்மயானந்த குரு' என்ற தலைப்பில் உள்ள பாடல்கள் கல்லால் நிழற் கடவுள்மீது அருளப் பெற்றவை. தமது குருநாதரின் பெருமையை மெளனகுரு வணக்கம்’ என்னும் திருப்பதிகத்தில் வியந்து போற்றினர். இதன் ஒவ் வொரு பாடலும், "மந்த்ரகுரு வே!யோக தந்த்ரகுரு வேlமூலன் மருபில்வரு மெளனகுருவே!" என்ற தொடரால் முடிகின்றது. இப்பாடல்கள் யாவற்றையும் தாயுமானவரின் சிற்றன்னையின் புதல்வரான அருளையபிள் ளை என்பார் எழுதிப் பாதுகாத்துப் பிறருக்கும் உரைத்தனர் எனபது வரலாறு. இந்நிலையில் திருச்சி நாயக்கர் மன்னர் தாயுமானவரிடம் பல திருவருட் புதுமைகளையெல்லாம் அறிகின்றார். மன்ன ருக்கு அச்சமும் வியப்பும் ஏற்படுகின்றன. ஒருநாள் அவர் தாயுமானவரை வணங்கி, "ஐயன்நீர், இதுவரை தங்கள் பெருமையை அடியேன் உணர்ந்திலேன்; அடியேனால் 7. கண்ணிகள் - (1-6)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/31&oldid=892316" இலிருந்து மீள்விக்கப்பட்டது