பக்கம்:தாயுமானவர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ• 14 శః இப்பிறவி என்னும்ஒர் இருட்கடலில் மூழ்கிநான் என்னும் ஒரு மகரவாய்ப்பட்டு இருவினை எனும்திரையின் எற்றுண்டு புற்புதம் எனக்கொங்கை வரிசைகாட்டும் துப்பு:இதழ் மடந்தையர் மயல்கண்ட மாருதச் சுழல்வந்து வந்துஅடிப்பச் சோராத ஆடையாம் கான்ஆறு வான்நதி சுரந்ததுஎன மேலும் ஆர்ப்பக் கைப்பரிசு காரர்போல் அறிவுஆன வங்கமும் கைவிட்டு மதிமயங்கிக் கள்ளவங் கக்காலர் வருவர்என்று அஞ்சியே கண்கருவி காட்டும் எளியேன் - தேசோமயானந்தம் - 2 மின்போலுந் இடைஒடியும் ஒடியும்என மொழிதல்போல் மென்சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப வீங்கிப் புடைந்துவிமு சுமைஅன்ன கொங்கைமட மின்னர்கள் பின்ஆவலாய் என்போல்அலைந்தவர்கள் கற்றார்கள் கல்லார்கள் இருவர்களில் ஒருவர் உண்டோ - மேலது 10 என்பன போன்ற பாடல் தம் அநுபவத்தின் விளைவு எனக் கருதலாம்.' மற்றும் 'எந்நாட் கண்ணியில் 'மாதர்மயக்கு அறுத்தல்' என்ற தலைப்பிலுள்ள பதினைந்து கண்ணிகளும் இக்காரணத் தால்தான் எழுந்தனவோ என்று கருதவும் இடம் உண்டு. மெய்வீசும் நாற்றம்எலாம் மிக்கமஞ்ச ளால்மறைத்துப் பொய்வீசும் வாயார் புலைஒழிவது எந்நாளே.(1) காமனைவா என்றுஇருண்ட கண்வலையை வீசும்மின்னார் நாம்ம் மறந்துஅருளை நண்ணுநாள் எந்நாளே (4) 1. அடிகளின் வாழ்க்கையில் இப்படி ஒன்றும் நேரிடவில்லை.இது நைச்சியானந்த மாகக் கூறியது தாயு-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/34&oldid=892319" இலிருந்து மீள்விக்கப்பட்டது