பக்கம்:தாயுமானவர்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 o' வாழ்வில் திசைதிருப்பம் 令 வீங்கித் தளர்ந்து விழும்முலையார் மேல்விழுந்து தூங்கும்மதன் சோம்பைத் துடைக்குநாள் எந்நாளே (C) உந்திச் சுழியால் உளத்தைக் கழித்தகன தந்தி ஸ்தனத்தார் தமைமறப்பது எந்நாளோ(9) தட்டுவைத்த சேலைப்பூங் கொய்சகத்தில் சிந்தைஎல்லாம் கட்டிவைக்கும் மாயம்மின்னர் கட்டுஅழிவது எந்நாளே (10) என்ற கண்ணிகளில் இதனை ஒர்ந்து உணரலாம். வெளியேற்றம்: இனி திரிசிரபுரத்திலிருந்தால் அரசியின் தொந்தரவு அடிக்கடி நேரிடும் என்று கருதிய தாயுமானவர் அன்றிரவே தம் சிறிய தாயார் மகனான அருளையரோடு திரிசிரபுரத்திலிருந்தே வெளியேறினார். இருவருமாகத் தென் றிசை நோக்கிச் சென்றனர். வழியில் நல்லூர் என்ற சிற்றுரினை அடைந்தபொழுது தாயுமானவர் தம் சிவபூசைப் பெட்ட கத்தை எடுத்துவரத் தவறினமையை உணர்ந்தார். உடனே அதனை எடுத்து வருமாறு அருளையரை அனுப்பி வைத்தார். பின்னர் தாயுமானவர் அயர்வுற்று அமர்ந்திருந்தபொழுது நல்லுரரினர் அவரைப் பாலுணவு கொள்ளுமாறு வேண்டினர். அப்போது தாம் பாடிக் கொண்டிருந்த கருணாகரக் கடவுள் என்னும் பதிகத்தில் ஐந்து பாடல்கள் நிறைவுற்றிருந்ததென் பதும், 'பண்னேன் உனக்கானபூசை எனத் தொடங்கும் ஆறாவது பாடலைப் பாடியருளித் தமது பசியை ஒரு சிறிது போக்கிக் கொண்டார் என்பதும் செவிவழிச் செய்தி. - இந்நிலையில் திரிசிரபுரத்தில் தாயுமானவரைக் காணாமை யால் அரசி மிகவும் சினமுற்றாள். தன் காம உணர்ச்சியைத் தனிக்காதவர்மீது எவ்வளவு சினமுற்றிருக்க வேண்டும் என் பதை நாம் ஊகித்துதான் அறிய வேண்டும். மந்திரத் தொழில் வல்லார் ஒருவனை அவரைத் தேடிச் சென்று, கண்டறிந்து, வசியம் செய்து திரும்பக் கொணருமாறு பணித்தாள். சூர்ப்ப ணகைக் காமமல்லவா? அது சும்மா விடுமா? எப்படியோ அவன் தாயுமானவர் நல்லூரில் இருப்பதை அறிந்து கொண் டான். அவ்வூரையடைந்து நிட்டையிலிருந்த அவருக்குப் பின்னிருந்து வசிய மந்திரத்தை ஒதிய பொழுது தாயுமானவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/35&oldid=892320" இலிருந்து மீள்விக்கப்பட்டது