பக்கம்:தாயுமானவர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் திசைதிருப்பம் శ 17 శ. 'நாற்றைப் பதித்ததென ஞானமாம், பயிரதனை நாட்டிப் புலப்பட்டியும் நமனான தீப்பூடும் அணுகாமல் முன்னின்று, நாடுசிவ போகமான பேற்றைப் பகுத்தருளி எனையாளவில்லையே? பெரியஅகி லாண்டகோடி பெரியநாயகி|பெரிய கலைமாநகர்மருவு பெரியநாயகிஅம்மையே’ என்ற பாடற் பகுதியில் தம்மிடம் மோனமாம் பயிரதனை நாட்டுமாறு வேண்டுகின்றார். பின்னர் தாயுமானவர் அருளைய பிள்ளையுடன் இராமே சுரம் சென்றார். இராமநாதனை வணங்கினார். “மாது காதலி பங்கனை, அபங்கனை மாடமாளிகைகுழும் சேது மேவிய இராமநாயகன்றனைச் சிந்தைசெய்! மட்நெஞ்சே!' என்பதைக் காணலாம். இராமேசுரம் வந்த இராமபிரான் சிவ பூசை செய்ய காசியிலிருந்து ஓர் இலிங்கம் கொணருமாறு சிறிய திருவடியை அனுப்பினார். அவர் காலந்தாழ்த்தும் வர வில்லை. சீதாப்பிராட்டி மணலைப் பிடித்து இலிங்கமாக்க அதை இராமபிரான் வழிபட்டனர். அந்த இலிங்கமே இராம லிங்கம்; கருவறையிலிருப்பது. ஆஞ்சனேயர் தாமதித்துக் கொணர்ந்த காசிலிங்கம் இராமலிங்கர் சந்நிதியின் வடக்கில் சில அடி துரத்துள் நிறுவப்பெற்றுள்ளது. இராமேசுரத்தில் அருளும் அழகும் நிறைந்த இறைவியின் மீது பாடிய பதிகம் மலைவளர் காதலி என்பது. எட்டுப் பாடல்களைக் கொண்டது. இறைவியின் பெயர் மலைவளர் காதலி, பர்வதவர்த்தினி என்பது வட மொழிப் பெயர். இந்த அாைனையை, 2. பெரிய தாயகி - 1 3. ஆசையெனும் -11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/37&oldid=892322" இலிருந்து மீள்விக்கப்பட்டது