பக்கம்:தாயுமானவர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் திசைதிருப்பம் தொடக்கும் என்நெஞ்சம்; மனமற்ற பூரணத் தொட்டிக்குளே முடக்குவன் யான்பர மானந்த நித்திரை மூடிடுமே" என்ற பாடலில் உணர்த்துவார். இறைவனது பூரணம் தன்னை விழுங்கியவிடத்து ஒன்றுகூற வொண்ணாது. இதனை, "நானென் றொருமுதல் உண்டென்ற நான்தலை நான,என்னுள் தானெற் றொருமுதல் பூரண மாகத் தலைப்பட்டொப்பில் ஆனந்தம் தந்தென் அறிவையெல் லாம்.உண்டு அவசம்நல்கி மோனந் தனைவிளைத் தால்இனி யாது மொழிகுவதே?" என்று காட்டுவர். மேலும், மோன் நிலை பூரணத்துவம் எய்திய நிலையில், 'ஆனந்த மோனகுரு வாம்எனவே, என்அறிவில் மோனந் தனக்கிசைய முற்றியதால் - தேனுந்து சொல்லெல்லாம் மோனம்; தொழிலா தியும்மோனம்; எல்லாம்நன் மோனவடி வே" எனவும், "மோன குருஅளித்த மோனமே ஆனந்தம்; ஆானம் அருளும்அது நானும்அது வானதி நின்ற நிலையும்.அது; நெஞ்சப் பிறப்பும்.அது என்றறிந்தேன்; ஆனந்த மே.' எனவும் கூறுவர். மோன நிலையைக் காட்டிய குருமூர்த்தி யின் பெருமையை, 18. மேலது.-12 19. மேலது - 13 20. உடல் பொய்யுறவு - 73 21. மேலது - 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/43&oldid=892329" இலிருந்து மீள்விக்கப்பட்டது