பக்கம்:தாயுமானவர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 24 & தாயுமானவர் "ஞானநெறிக் கேற்றகுரு நண்ணரிய சித்திமுத்தி தானம் தருமம் தழைத்தகுரு - மானமொடு தாயெனவும் வந்தென்னைத் தந்தகுரு: என்சிந்தை கோயிலென வாழுங் குரு' என்று மொழிவர். மோனநிலையை, 'வாரிக் கொண்டெனை வாய்மடுத் தின்பமாய்ப் பாரிற் கண்டவை யாவும் பருகினை: ஓரிற் கண்டிடும் ஊமன் கனவென யாருக் குஞ்சொல வாயிலை ஐயனே' என்று மேலும் கூறுவர். நம்மாழ்வார் திருக்காட்கரைத் திரு வாய்மொழியின் 'வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில்என்று ஆர்வுற்ற என்னைஒழிய என்னில் முன்னம் பாரித்துத் தான்என்னை முற்றப் பருகினான்; கார்ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே' என்ற பாசுரத்தில் இறைவன் தன்னைப் பருகியதாகக் கூறும் நிகழ்ச்சி ஈண்டு ஒப்புநோக்கி உணரத்தக்கது. திரிசிபுரம் வருகை: அடிகள் துறவு நிலையை ஏற்ற பின்னர் திரிசிரபுரம் மெளன குரு மடத்தை அடைந்து தமது குருநாதரை வணங்கிச் சிலகாலம் தங்கியிருந்தார். குருநாதரும் தாயுமானவரின் பரிபக்குவ நிலையைக் கண்டு, அவருக்கு நிருவான தீக்கை செய்து வைத்து துறவு நிலையை வழங்கி னார். அதனால், தாயுமானவர் பெருநிதியம் கிடைத்த வெறுமி டியன் மகிழ்வடைவதைப் போன்று மகிழ்வுற்றார். பின்னர் 22. மேலது - 82 23. பொன்னை மாதரை 30 24. திருவாய் 9.6:10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/44&oldid=892330" இலிருந்து மீள்விக்கப்பட்டது