பக்கம்:தாயுமானவர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் திசைதிருப்பம் * 25 多 குருவின் அடி நிழலிலேயே இருந்து ஞானநிட்டையைப் பயின்று வந்தார். அக்காலத்தில் சிரகிரிப் பெருமான் திருக்கோ யிலில் எழுந்தருளியிருக்கும் தென்முகக் கடவுள் திருமுன்பும் அவர் ஞானநிட்டை பயிலும் இடமாகக் கொண்டார். தமது குருவிற்குப் பின்னர் 1644ஆம் ஆண்டு தொடங்கிச் சின்னாள் அவரது திருமடத்துத் தலைவராயும் திகழ்ந்தார். பல நாட்களுக்குப் பின்னர் தாயுமான அடிகள் சிவத்தலப் பயணம் செய்ய விரும்பினார். தம் இளவலோடு தென்றிசை யில் பல திருத்தலங்களை வழிபட்டு இறைவனைச் சேவித்து, இராமநாதபுரத்தை அடைந்தார். அந்நகரின் கீழ்பால் காட்டுர னி என்னும் இடத்தில் புளியமரம்" ஒன்றன் நிழலில் தங்கி திட்டை கூடியிருந்தார். இக்காலத்தில்தான் தம்மை அகலாதி ருந்த அருளையருக்கும் கோடிக்கரை ஞானியார் முதலிய பக்கு விகட்கும் அடிகள் ஞானோபதேசம் செய்தருளினார். அடிகள் தங்கியிருந்த இடத்தில் அவருக்கு வசதி செய்யக் கருதிய அம்மையார் ஒருவர் குளமொன்று தொட்டுப் பூங்கா வொன்று அமைத்து அவ்விடத்தில் அடிகளை வைகும்படி வேண்டினாள். அந்த இடம் இப்பொழுது இலட்சுமிபுரம் என்று வழங்கி வருகின்றது. - இறையடிகூடல்: அடிகள் பல நாள் நிட்டையில் இருந்த பொழுது, அவர் திருமேனி உயிர்நீத்த உடல்போல் தோன்றி னமையால், அவர் தேகவியோகம் ஆனதாகக் கருதி அவர்தம் உடலுக்கு எரியூட்டினர் என்றும், தீப்பற்றியபொழுது, அடி கள் கண்விழித்துப் பார்த்து நிகழ்ந்ததை உணர்ந்து அங்ங் னமே இறைவனோடு இரண்டறக் கலந்தார் என்றும் ஒரு செவிவழிச் செய்தி வழங்கி வருகின்றது. இதன் உண்மை தெளிவாக அறியக்கூடவில்லை. எவ்வாறாயினும் அடிகள் இறைவன் திருவடி நிழலை அடைந்தது சாலிவாகன சகாப்தம் 25. நம்மாழ்வரும், திருப்பளியாழ்வாரின் கீழ் தங்கியிருந்தது ஈண்டு நினைக்கத் தக்கது. உலக வாழ்க்கை புளித்துப் போகட்டும் என்று கருதி இருவரும் புளியமரத்தடியில் தங்கினர் போலும்! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/45&oldid=892331" இலிருந்து மீள்விக்கப்பட்டது