பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இல்லறவியல் 27 8. அன்புடையவரா யிருத்தல் அன்பு வெளிப்படாதபடி அடைக்கும் தாழ்ப்பாள் உண்டா? அன்புடையவர் சிந்தும் சிறு கண்ணீரே அவரது உள்ளன்பை ஆரவாரப்படுத்தி விடும். 71 அன்பிலாதவர் எல்லாப் பொருளையும் தங்கட்கே உரியனவாக்கிக் கொள்வர்; அன்புடையோரோ தம் எலும்பையும் பிறர்க்கு உரித்தாக்குவர். 7շ அருமையான உயிர்க்கு எலும்புடைய உடம்போடு உள்ள தொடர்பு, பிற உயிர்களிடத்து அன்பு கொண்ட வாழ்விற்காக உண்டானது என்பர். - 73 அன்பு எல்லாரிடத்தும் ஆர்வத்தை விளைவிக்கும்; அவ்வார்வம் நட்பு என்னும் அடைதற்கரிய சிறப்புப் பயனை அளிக்கும். 74 உலகில் மகிழ்வுடன் வாழ்பவர் அடைந்துள்ள சிறப்பு, பிறரிடம் அன்பு கொண்டு வாழ்ந்து வருவதால் பெற்றது என்பர் அறிஞர். 75 அறச் செயலுக்கு மட்டுமே அன்பு துணையானது என்று அறியாதார் கூறுவர் ஒறுத்தல் போன்ற மறச் செயலுக்கும் அந்த அன்பே காரணம். 76 எலும்பில்லாத புழு பூச்சியை வெய்யில் பொசுக்குவது போல், அன்பில்லா உயிரை அறநெறி ஒறுக்கும். 77 உள்ளத்தில் அன்பில்லாத உயிர் வாழ்வதென்பது, வன்மையான பாறையில் பட்டமரத்தை நட்டுத் தழைக்கச் செய்யும் கதைதான்! 7 உடம்பின் உள்ளுறுப்பாகிய அன்பை யிழந்தவர்க்கு, கை கால் முதலிய வெளியுறுப்புக்கள் என்ன நன்மை விளைவிக்க முடியும்? 79 உடம்பிலே உயிர் நிலைத்துநிற்பது, அன்புவழியைப் பின்பற்றுவதைப் பொறுத்திருக்கிறது. அன்பிலார் உடம்போ எலும்பைத் தோல் மூடிய ஒரு கூடே 8 O