பக்கம்:திருவாசகத்தேன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

எழுந்து எலும்பினைக் கடிக்கும்! உடம்பு. முழுதும் வங்கு பிடித்து இருக்கும்! போதாக் குறைக்குச் சொறியும் உண்டு! இவையே ஊர் நாயின் இலக்கணம்! இந்த ஊர் நாயை உவமிக்கின்றார் மாணிக்கவாச்கர்! ஆம்! கூர்ந்து நோக்கின் பல மனிதர்கள் ஊர் நாய்கள்தாம்! இல்லை, இல்லை! ஊர் நாயினும், கடையர்கள். கடவுளின் ஆணை வழி திரோதான் சக்தியால் வளர்க்கப்பெறாத மனிதன் வளராத மனிதன் ஊர் நாய்! இல்லை, இல்லை! ஊர் நாயைவிட மோசமானவன்! ஆம்! இவனும் எழுந் திருக்கிறான்; ஊர் சுற்றுகிறான். மூலைக்கு மூலை நின்று புறணி பேசுகிறான்; புறம் பேசுகிறான்; வம்பு செய் கிறான்; வம்பு வளர்க்கின்றான்! வம்பு வழக்குகளைத் தூண்டி விடுகிறான்; கிடைத்த இடத்தில் தின்கிறான்; இரந்து , திரிகின்றான், இரந்தும் தின்கிறான், இழிதொழில்கள் செய்தும் தின்கின்றான், பல இடங்களில் குடும்பம் நடத்துகிறான். இவனுடைய உடல், நோய்களின் கொள்கலன். இப்படியும் மனிதர்கள் இன்று வாழவில்லையா? இவர்களைச் சொன்னால் உடம்பெல்லாம் பற்றி எரியும் என்பதால் மாணிக்கவாசகர் தம்மீது பழிசுமத்திக் கொள்கிறார்.

ஊர் நாயிற் கடையனானேன் என்கிறார். இந்த ஊர் நாய்கள் தரங்கெட்டுப் போனதோடு அல்லாமல் வளர்ப்பு நாய்களையும் கவர்ச்சித்து கெடுக்கும்! வளர்ச்சியில் முதிர்ச்சி பெறாத வளர்ப்பு நாய்கள் பல விதிமுறைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகளுக்கு அஞ்சி வளர்ப்பி லிருந்து வழுவி ஊர் நாய்க் கூட்டத்தில் போய்ச் சேர்ந்து விடுவது உண்டு. ஐயோ பாவம் விதிவழியே நடத்தல் பாதுகாப்பு! விதிமுறைகளின்படி வாழ்தல், பழக்கப்பட்ட வர்களுக்கு எளிது! பாதுகாப்பும்கூட விதிமுறைகளே தவறுகளிலிருந்தும் பிழைகளிலிருந்தும் பாதுகாப்பளிக்கும். அயர்ந்தறியாது. செய்யும் தவறுகளுக்குக் கண்டித்தலும் தண்டனைகளும் பெறுவது மருத்துவமேயாகும்.