பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருச்சதகம் * 3


பத்தாக இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பத்திற்கும் பழங்காலத்திலேயே ஒவ்வொரு தலைப்புத் தரப்பெற்றிருந்தது. நூறு பாடல்களைக் கொண்ட சதகம் என்று பெயரிட்டுவிட்டுப் பத்துப் பத்தாகப் பிரித்து ஒவ்வொரு தலைப்பின்கீழ்க் கொண்டுவருவது சரியா என்பது ஆராயத்தக்கது. அன்றியும். ஒவ்வொரு பத்துப் பாடலுக்கும் கொடுக்கப்பட்டுள்ள உள்தலைப்பில் ஒன்றிரண்டு போக ஏனையவை அதன் பின் வரும் பாடல்களோடு ஒரு சிறிதும் பொருந்துமாறு இல்லை. எனினும், அவை இப்பதிப்பில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியத்துள் ஒன்றாகிய ஐங்குறுநூற்றில் பத்துப் பத்தாகப் பிரிக்கப் பெற்றுள்ள நூறு பாடல்கள் ஒரு தனித்தலைப்புடன் விளங்குவதைக் காணலாம். அன்று சதகம் என்ற வட சொல் புழக்கத்தில் இல்லை. ஆனாலும், ஐங்குறுநூற்றில் உள்ள நூறு பாடல்கள் ஒரு தலைப்பினுள் வந்ததாலும், அவை பத்துப் பத்தாகப் பிரிக்கப்பட்டிருந்ததாலும் அனைத்துப் பாடல்களும் ஆசிரியப்பாவாகவே அமைந்து உள்ளன. திருவாசகத்தில் அவ்வாறு இல்லை.

மெய்யுணர்தல்

5. மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து
உன் விரை ஆர் கழற்கு என்
கை தான் தலை வைத்து கண்ணி
ததும்பி வெதும்பி உள்ளம்
பொய் தான் தவிர்ந்து உன்னைப் போற்றி
சய சய போற்றி என்னும்
கை தான் நெகிழவிடேன் உடையாய்
என்னைக் கண்டு கொள்ளே 1

அரும்பி-புளகாங்கிதங்கொண்டு. விரை-மணம், ததும்பி-இமைகளில் வழியக்கூடிய அளவு நிரம்பி. கைதான்