பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



12.

உழிதரு காலும் கனலும் புனலொடு
மண்ணும் விண்ணும்
இழிதரு காலம் எக் காலம் வருவது
வந்ததன் பின்
உழிதரு கால் அத்த உன் அடியேன்
செய்த வல் வினையைக்
கழிதரு காலமும் ஆய் அவை காத்து
எம்மைக் காப்பவனே 8

உழிதரும்-உலாவும். கால்-காற்று. இழிதருகாலம்-ஐம்பெரும் பூதங்களும் தத்தம் தன்மாத்திரையில் ஒடுங்குங் காலம். உழிதரு கால் அத்த-என்றும் ஆடுகின்ற அத்தனே. அவைகாத்து-மீண்டும் என்னைப்பற்றாதே காத்து.

ஐம்பெரும் பூதங்களும் அழிகின்ற சர்வ சங்கார காலத்தையும் நிர்ணயிக்கின்ற காலத்தத்துவமாக நிற்பவனே! யாம் செய்த பழவினைகள் வந்து பற்றாமல் காத்தருள வேண்டுகிறேன் என்கிறார்.


13.

பவன் எம்பிரான் பனி மா மதிக்
கண்ணி விண்ணோர் பெருமான்
சிவன் எம்பிரான் என்னை ஆண்டு கொண்டான்
என் சிறுமை கண்டும்
அவன் எம்பிரான் என்ன நான் அடியேன்
என்ன இப் பரிசே
புவன் எம்பிரான் தெரியும் பரிசு
ஆவது இயம்புகவே - 9

கண்ணி-தலையிற்சூடும் மாலை. புவனம்-உலகம்.

‘அனைத்தையும் படைப்பவனும், பிறைமதி சூடியவனு மாகிய பெருமான் மிக அற்பனாகிய என்னையும் ஒரு பொருளாக்கி என் குறைகளைக் கண்டுகொள்ளாமல் என்னை ஆட்கொண்டான். இறப்ப உயர்ந்தவனாகிய அவன், இறப்ப இழிந்தவனாகிய என்னையும் ஆட்