பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 25


விட்டவர்கள்கூட, நான் யார் தெரியுமா? இவை எல்லாம் என்னுடைய சொத்துக்கள் என்று கை, கால்களை ஆட்டி நெஞ்சை நிமிர்த்திப் பேசுகின்றனர். இந்த 'யானும்' 'எனதும்' யாரைச் சுட்டுகின்றன? அழிகின்ற உடம்பையா? அழியாது உள்ளே நிற்கும் ஆன்மாவையா? ஆன்மாவைத்தான் என்பது அனைவருக்கும் நன்கு விளங்கும். ஆன்மாவை இவ்வாறு உணரவும், பேசவும் செய்தது யார்? அவன்தான் பொம்மலாட்டக்காரனாகிய கோன்(தலைவன்) என்கிறார் அடிகளார்.

இந்தப் பொம்மைகள் உணர்ச்சியும், அறிவும் பெற்றால் தங்களை ஆட்டுவிப்பவன் பொம்மலாட்டக்காரன் என்பதை எளிதில் உணர்ந்துவிடும். உலகில் வாழ்கின்ற நாம், நம்பாலுள்ள அறிவையும் உணர்வையும் நன்கு வளர்த்துக்கொண்டால், நம்மையும், நம்மை ஆட்டுவிக்கும் தலைவனையும், மறைத்து நிற்கின்ற பொம்மலாட்டத் திரை போன்ற அஞ்ஞானத் திரையை நீக்கி, யான் என்றும் எனது என்றும் நம்மைப் பேசவைப்பவன் தலைவனாகிய இறைவனே என்பதை உணர முடியும்.


20.

வாழ்த்துவதும் வானவர்கள்
தாம்வாழ்வான் மனம்நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை
எல்லாம் தொழவேண்டி
சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை
நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான்
யானும் உன்னைப் பரவுவனே
16

தாழ்த்துதல்-தன்முனைப்பின்றித் தாழச்செய்தல், மதுகரம்-வண்டு. பாழ்த்த பிறப்பு-பயனற்ற பிறப்பு.

பிறப்பு-இறப்பு, சுழற்சியில் சிக்கித் தவிக்கின்றவர்களை வாழ்த்துவதில் பொருளுண்டு. 'இந்தப் பிறப்பு இன்னும்