பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
திவான் லொடபட சிங்
பகதூர்
பூலோக விந்தை

மது சென்னை இராஜதானிக்கு வடக்கில் சுதேச அரசரால் ஆளப்பட்டுவரும் பெரிய சமஸ்தானம் ஒன்று இருக்கிறது. ஊரைச் சொன்னாலும் சொல்லலாம், பெயரை மாத்திரம் சொல்லல் ஆகாது என்பது விவேகிகளால் அநுபவபூர்வமாகக் கண்டு பிடிக்கப் பட்ட முக்கியமான கொள்கை. ஆதலால், நாம் அந்த சமஸ்தானத்தின் உண்மையான பெயரைச் சொல்லாமல், அதை பூலோக விந்தை என்ற பெயரால் குறிப்போம். அந்த பூலோகவிந்தையை ஆண்டு வரும் அரசருடைய பெயர் பலவித விசேஷங்களோடு கூடி ஒன்றரைமயில் தூரம் நீண்டு, ஒரு பெரிய கூட்ஸ் வண்டியில் வைத்து இழுத்தாலும் மாளக்கூடாத அபார மாட்சிமை வாய்க்கப் பெற்றிருப்பதால், அதை நாம் பூர்த்தியாக எடுத்துக் கூற இந்தச் சிறிய ஸ்தலபுராணம் இடந்தராது என்பது நிச்சயம். சூராதிசூர வீராதிவீர மன்னாதிமன்ன அதி வீர தீர புஜ பல பராக்கிரம கோலாகல உப்பில்லாமல் கலக்கஞ்சி குடித்து வானத்தை வில்லாய் வளைத்து ஆற்று மணலைக் கயிறாய்த் திரித்த ராஜாதிராஜ அதி ராஜா......... பகதூர் என்று முற்றுப்புள்ளி வைக்க இடமே கொடாமல் அது வெகுதூரம் போய்க் கொண்டே இருக்கும். அந்த அரசர் இங்கிலீஷ் கல்வியில் ஆழ்ந்த பரிச்சயம், விசேஷமான புத்திசாலித்தனம் முதலிய சிறப்புகள் உடையவர். தாம் தமது சமஸ்தானத்தைப் பழைய கர்னாடக முறைப்படி ஆடாமல், புது நாகரிக முறைமைப்படியும் இங்கிலீஷ் தேசங்களின் உதாரணங்களைப் பின் பற்றியும் ஆளவேண்டும் என்றும், குடி மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்து நீதி வழுவாமல்,

திலொ.சி-2

17