பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

என்று வண்டிக்காரன் எண்ணிக்கொண்டான். அவர்கள் இருவருக்கும் மூன்று தினங்களுக்குள் சிநேகம் ஏற்பட்டு முற்றிப்போய் விட்டது. திவான் தமது மனத்தைப் பெரிய பெரிய விஷயங்களிலும், ராஜ்ய நிர்வாகத்திலும், நீதிபரிபாலனத்திலும் செலுத்தி இருந்தாராதலால், அவர் அந்த அற்ப விஷயத்தை அவ்வளவாகக் கவனிக்கவில்லை. அந்தப் பாராக்காரனை மகாராஜனே தமது உபயோகத்திற்காக அனுப்பி இருக்க வேண்டுமென்று, திவானும், வண்டிக்காரன் நினைத்தது போலவே, நினைத்துக்கொண்டு அதைப் பற்றி விசாரிக்காமலே இருந்து விட்டார்.

அவன் ஒவ்வொரு நாளும் திவானினது வண்டியில் போவதும், வருவதுமாய் இருந்ததைக் கண்ட, அந்த நகரத்தின் ஜனங்கள் எல்லோரும், திவானிடம் நெருங்கிப் பழகும்படியான ஏதோ முக்கியமான உத்தியோகம் அந்த மனிதனுக்குக் கிடைத்திருக்கிறதென்றும், அவனுக்குச் செல்வாக்கு அகிதமாக இருக்குமென்றும், எண்ணிக் கொண்டனர். திவானினது வண்டி அவரது கச்சேரிக்குப் போகும் வழியில் ஏராளமான பலவகைப்பட்ட கச்சேரிகளும் பெரிய பெரிய வர்த்தக ஸ்தலங்களும் இருந்தன. அவரது வண்டி போகும்போது பின்பக்கத்தில் உட்கார்ந்திருந்த நமது சமயற்காரன் முக்கியமான பல உத்தியோகஸ்தர்களையும் வியாபாரிகளையும் பார்க்கும் போதெல்லாம் அவர்களை நோக்கிக் கோபமாக தனது கைவிரலை ஆட்டி, "இருக்கட்டும்; உனக்குத் தகுந்த வழி செய்கிறேன்" என்று சொல்லிக் கறுவுகிறவன் போலப் பல விதமான சைகைகளைச் செய்து கொண்டே போகத் தொடங்கினான். அதைக் கண்ட ஒவ்வொருவரும், "என்ன இது? ஒவ்வொரு வேளையிலும் இவன் நம்மைப் பார்த்து இப்படிக் கறுவிவிட்டுப் போகிறானே! நம் மீது திவானுக்கு ஏதாவது கோபம் பிறந்திருக்குமோ, இவன் திவானிடம் அந்த விஷயத்தைத் தெரிந்து கொண்டிருப்பானோ நமக்கு என்ன கெடுதல் நேருமோ தெரியவில்லையே" என்று நினைத்துக் கவலைக்கொண்டு பயந்து, அவன் தனியாய்ப் பாதசாரியாக எப்போது வருவானென்று ஆவலோடு எதிர்பார்த்திருந்து, அவனுடன் தனிமையில் பேசி, அவன் தம்மைக் கண்டு கறுவ வேண்டிய காரணமென்ன என்று விசாரிக்க, நமது சமயற்காரன் அவரவருக்குத் தகுந்தபடி தந்திர-

42