பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

மாக மறுமொழி சொல்லத் தொடங்கினான். தன்னைக் கேட்ட மனிதர் ஏதாவது உத்தியோகம் வகிப்பவராயிருந்தால் அவரை நோக்கி "ஐயா! நீர் வேலை பார்ப்பது நிரம்பவும் அதிருப்திகரமாக இருப்பதாய் திவானுக்கு சங்கதி எட்டி இருக்கிறது. அதைப்பற்றி நேற்று இரவில்தான் பிரஸ்தாபம் செய்தார். அதனால்தான் நான் உம்மைக் கண்டவுடன் அந்த அதிருப்தியை உமக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஜாடை காட்டினேன். திவான் வெளிப் பார்வைக்குக் கண்டிப்பான மனிதராக இருக்கிறாரேயன்றி உண்மையில் நிரம்பவும் இரக்கமுள்ள மனிதர்தான். எல்லாம் நாம் நடந்து கொள்ளும் மாதிரியிலிருக்கிறது. அவரை வெகு சீக்கிரத்தில் சரிப்படுத்திவிடலாம்" என்றான்.

அதைக் கேட்ட அந்த உத்தியோகஸ்தர் ஒரு பெருத்த பணத்தொகையை இரகசியமாக அவனிடம் கொடுத்து, அதை திவானிடம் சேர்ப்பித்து அவருடைய அதிருப்தியையும் கோபத்தையும் சமாதானப்படுத்தும்படி வேண்டிக்கொள்ள, சமயற்காரன் அந்தத் தொகையை வாங்கிக்கொண்டு அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டு போய்விட்டான். மறுநாள் அவன் அதே உத்தியோகஸ்தரைப் பார்க்கையில் சந்தோஷமாகப் புன்னகை செய்து தான் திவானை சரிப்படுத்திவிட்டதாகச் சைகை காட்டிவிட்டுச் சென்றான். மேலே குறிக்கப்பட்டபடி, அவனால் பயமுறுத்தப்பட்ட மனிதர் ஒரு வர்த்தகராக இருந்தால், அவரைப் பார்த்து "ஐயா! உமக்கு ஏராளமான இலாபம் வருகிறதென்றும், மாதம் ஒன்றுக்கு நூறு ரூபாய் வருமான வரி விதிக்க வேண்டும் என்றும் இரகசியமாய்க் கீழ் அதிகாரிகள் திவானுக்கு எழுதியிருக்கிறார்கள். அதைப்பற்றி திவான் நேற்றுதான் பிரஸ்தாபம் செய்து கொண்டிருந்தார். திவான் வெளிப்பார்வைக்கு நெருப்புப் போன்ற மனிதரானாலும், உள்ளுற நல்ல இளக்கமான மனம் உடையவர். அதுவுமின்றி, அவருக்குப் பணச்செலவு அதிகம். ஏதாவது தக்க தொகையாகக் கிடைக்கும்பட்சத்தில், அவர் வாங்கிக்கொள்வார். என்னை அவர் தம்முடைய சொந்தக் குழந்தைபோல பாவிக்கிறார். என் சொல்லை அவர் தட்டுகிறதே இல்லை” என்பான்.

அந்த வார்த்தகர் அவனைக் கெஞ்சித் தமக்கு திவான் வரி போடாமல் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, அவனிடம்

43