பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

தப்பித்துக் கொண்டதாகத் தெரிந்தது. எப்படியெனில் சில மனிதர்கள் அந்த ஊரில் வந்து புதிதாகக் குடியேறினார்கள். அவர்கள் ஏற்கெனவே குழந்தைகளை வெளியூர்களில் பெற்றுக்கொண்டு வந்ததன்றி, அதற்குமேல், அந்த ஊரில் அவர்களுக்குக் குழந்தை பிறக்காத நிலைமையில் இருந்தமையால், அவர்களை அந்தக் குழந்தைவரி பாதிக்காது என்ற நினைவினால் நமது திவான் லொடபட சிங் பகதூர் இன்னொருவிதமான வரியை ஸ்தாபித்தார். பிறக்கும் மனிதரெல்லோரும் ஒருவர் தப்பாமல் இறப்பது நிச்சயமாதலால், ஒவ்வொரு பிணத்திற்கும் ஒவ்வொரு பணம் வரி யென்று நமது திவான் லொடபட சிங் பகதூர் திட்டம் செய்து, அதற்கென்று ஓர் இலாகாவையும் குமாஸ்தாக்களையும் ஏற்படுத்தி, சுடுகாட்டிற்குப் போகும் வழியில் ஒரு சுங்கன்சாவடி கட்டி வரி வசூல் செய்ய ஏற்பாடு செய்தார். அந்த இலாகாவும் திருப்திகரமாகவே வேலைசெய்து ஏராளான பணம் குவிய ஒரு சாதனமாக இருந்தது. மறுபடியும் நமது திவான் லொடபட சிங் பகதூர் சிந்தனை செய்யலானார். தான் மற்றவர்களுக்கு வரி விதிப்பது ஒரு சாமர்த்தியமல்ல என்றும், அந்த ஊர் மகாராஜனுக்கும், திவானுக்கும், வரி விதிக்கவேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டார்.'அவர்களிருவருக்கும் குழந்தைகள் பிறக்கவில்லை, அவர்கள் சீக்கரத்தில் இறப்பதாகவும் தோன்றவில்லை. அவர்கள் இறந்தபின் வரி விதிப்பது, அவர்களுக்குப் படிப்பினை கற்றுக் கொடுப்பதாகாது. ஆதலால் அதற்கு என்னசெய்யலாம்" என்று நமது திவான் லொடபட சிங் பகதூர் சில தினங்கள் வரையில் சிந்தனை செய்து ஒருவித முடிவிற்கு வந்தார். அந்த ஊரில் கங்கா தீர்த்தம் என்று பெயர் கொண்ட ஒரு குளமிருந்தது. அதிலிருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு போய்த்தான் அந்த ஊரிலுள்ள சகல மான ஜனங்களும் சமையல் செய்து தண்ணீர் பருக வேண்டுமாதலால், அந்தக் குளத்திலிருந்து எடுத்துப் போகப்படும் ஒவ்வொரு குடம் தண்ணீருக்கும் ஜனங்கள் ஒவ்வொரு பிடி அரிசி அல்லது வேறே ஏதாவது தானியம் கொடுக்க வேண்டுமென்று அவர் உத்தரவு செய்து, அதற்கு ஓர் இலாகாவையும், ஆள் மாகாணங்களையும் நியமித்தார்; அந்தக் குளத்தில் திவான் வீட்டார் தண்ணீர் எடுத்தால் அது மகாராஜனுடைய உத்தரவு என்றும், மகாராஜனுடைய

47