பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


6
உரிமைக் குரல்

னைவி வள்ளியையும், மகன் அருணகிரியையும் கொழும்பிற்கு அனுப்பிவிட்டு கனகவிஜயன், கயிற்றுக் கட்டிலில் பிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தான்.

வேறு யார் வருவதாய் இருந்தாலும் விஜயன் மனைவியை அனுப்பியிருக்க மாட்டான். பரமகுருவின் மீதும், லட்சுமி அம்மாள் மீதும் வள்ளியம்மை மிகுந்த அன்பு வைத்திருந்தாள்.

பரமகுருவின் கல்யாணத்திற்கு ஒரு வாரம் முன்பே, வள்ளியம்மையை அழைத்துக் கொண்டு கண்டிப்பாக வந்துவிடவேண்டும என்று எழுதி விஜயன் பெயருக்கு ஆயிரம் ரூபாய் பணமும், அனுப்பி இருந்தாள் லட்சுமி அம்மாள்.

வள்ளியம்மைக்குக் கூட அண்ணன் கல்யாணத்திற்கு போக வேண்டுமென்று ஆசைதான். ஆனால் விஜயன் தான், “எனக்கு முக்கியமான