பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

தென்னைமரத் தீவினிலே...

னாள். நீங்கள் போய் உங்கள் காரியத்தைக் கவனியுங்கள். நானும் அருணகிரியும் போய் அண்ணனைப் பார்த்துப் பேசிவிட்டு உடனே திரும்பி வந்து விடுகிறோம். யாருமே போகாம இருந்தா நல்லா இருக்காது,” என்றாள்.

விஜயனுக்கும் அதுவே சரியாகப்பட்டது. இப்படி சம்மதப்பட்டு மகனையும், மனைவியையும் அனுப்பிய பிறகு, ஏனோ அன்று அவன் மனம் குழப்பமாகவே இருந்தது.

“விஜய் அண்ணே!”

வாசலில் யாரோ கூப்பிடுகிற குரல் கேட்டு விஜயன் எழுந்து சென்றான். வெளியே குமரேசன் கூட்டத்திற்குப் போகிற தயார் நிலையில் நின்று கொண்டிருந்தான்.

“என்ன அண்ணே! மணி ஐந்தாகப் போகிறது. இன்னும் நீங்கள் மீட்டிங்குக்கு ரெடியாகாமே இருக்கீங்க? அவ்வளவு தூரம் போய்ச் சேர வேண்டாம்? புறப்படுங்க போகலாம்; உங்க கூடத்தான் பாலஸ் கபேல டிபன் சாப்பிடப் போறதா வீட்டிலே சொல்லிட்டு காப்பித் தண்ணி கூட குடிக்காமல் புறப்பட்டு வந்து விட்டேன்!”

“சரி உள்ளே போகலாம்!”

விஜயன் உள்ளே சென்று அவசரமாக தன்னுடைய குளியலை முடித்துக் கொண்டு சலவை