பக்கம்:தென்னைமரத் தீவினிலே.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீலமணி

47

செய்த வேஷ்டி சட்டைகளை அணிந்து கொண்டான். புறப்படும்போது மீண்டும் வள்ளியின் ஞாபகம் வந்தது திரும்ப வீட்டினுள் சென்று முருகன் படத்திற்கு எதிரில் இருந்த திருநீற்றை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டான்.

வழக்கமாக விஜயன் இம்மாதிரி மீட்டிங்கிற்கு செல்லும்போது வள்ளியம்மை, விஜயன் நெற்றியில் திருநீறு இட்டு அனுப்புவது வழக்கம்.

இன்று அவள் இல்லை! அவள் கையால் திருநீறு இட்டுக் கொள்ளாமல் செல்லுகிற அன்றைய அனுபவம் அவனுக்குப் புதிது. இந்த ஒருநாள் புதிய அனுபவமே அவனுக்கு வேதனையாக இருந்தது.

அவர்களுடைய அத்தனை காலக் குடும்ப வாழ்க்கையில் ஒருநாள் கூட வள்ளியம்மையை விட்டுப் பிரிந்து இருந்ததில்லை. கூட்டம் கட்சி வேலை என்று பல நாட்கள் அவன் தன் வீட்டிற்கே வராமல் கூட இருந்ததுண்டு. ஆனால் வள்ளியம்மை வீட்டில் இருக்கிறாள் என்கிற தெம்பு அவனுக்கு இருக்கும்.

அவனுடைய கூட்டத்திற்கு வந்தவர்கள் பலர் தன்பேச்சை, அவளிடம் புகழ்ந்து கூறியதையெல்லாம் கேட்டு ஆனந்தப்பட்டு விஜயனிடம் கூறி பூரித்துப் போவாள்.

விஜயன், தான் பேசிய எத்தனையோ பெரிய கூட்டங்களுக்கு அருணகிரியையும், தன்னுடன்