பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


குடிக்கின்ற அளவுக்குக் கேளிக்கை வாழ்வு வாழத் தொடங்கிவிட்டார்கள், இம் முறையில் பொதுமக்கள் வாழ்வும் அந் நாட்டுப் பேரறிஞர்கள் எழுதுகின்ற எழுத்தும் எவ்விதத் தொடர்பும் இல்லாமல் போய்விட்ட காரணத்தால் அவ்வெழுத்துக்கள் இன்றும் நிலைபெற்று இருக்கவும், அம் மக்களின் நாகரிகம் மட்டும் அழிந்து ஒழித்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்நிலை மாறி இருக்கக் காண்கிறோம். சங்கப் புலவர்கள் பாடல்கள் அற்றை நாள் தமிழர்களின் வாழ்வு, குறிக்கோள், விருப்பு வெறுப்புகள், குறைவு நிறைவுகள் ஆகியவற்றை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதுடன் அத்தகைய வாழ்விலிருந்து சிறந்த குறிக்கோள் வாழ்க்கையை அடையும் வழி எது என்பதையும் காட்டி நிற்கிறது.

தமிழ்க் கவிதையின் சாரமான இந்த அடிப்படை சங்க காலத்தில் இருந்து இன்று வரை தமிழ் இலக்கியத்தில் விளங்கக் காண்கிறோம். உலகத்திற்கு ஒரு பொதுமறை தந்த வள்ளுவர்கூடக் கூடுமானவரை அவ் இலக்கியம் மக்கள் வாழ்வோடு பொருந்தியதாக இருக்கவேண்டுமென்ற அடிப் படையிலேயே பாடிச் சென்றுள்ளார். இதனால் மிகப் பழைய தமிழ் இலக்கியங்களைப் படிக்கும்போது தமிழ் மக்களுEைய நாகரிகத்தை, உளப்பாங்கை அந் நூலின் கவிதைகள் பிரதி பலிக்கின்றன என்று துணிந்து கூறலாம். வாழ்வும் இலக்கியமும் ஒன்றையொன்று பின்னிக்கிடந்த காரணத்தால் தான், இலக்கிய வளம், வாழ்வின் வளத்தை அடியொற்றி இருந்த காரணத்தால்தான் இன்று வரை அவ் வாழ்வும் அதனை அடியொற்றி வந்த இலக்கியமும் நின்று விளங்கக்-