பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பெரிய புராணம் என்று வழங்கப் பெறும் திருத்தொண்டர் புராணம் தோன்றியது இக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டுதான். இந் நூல் தோன்றிய காலத்தில் தமிழ்நாடு' எத் நில்ையில் இருந்தது; இந் நூல் தோன்றியிராவிட்டால் இது எந் நிலையை அடைந்திருக்கும் என்பவற்றையெல்லாம் "குறிக்கோள்" என்ற தலைப்பில் விரிவாக ஆராயப் பெற்றுள்ளது. வாழ்க்கையில் குறிக்கோள் ஒன்று இல்லாமல் இன்ப வேட்டை ஒன்றையே கருத்தாகக் கொண்டு தலை கீழாகப் போய்க்கொண்டிருந்த தமிழ் மக்களைக் கை தூக்கி நன்னெறி காணச் செய்வதே சேக்கிழாரது குறிக்கோள் என்பதை நன்கு உணரமுடியும். எத்துணைச் சிறந்த பாட்லாயினும், கவிதை நயம் பொங்கி வழிவதாயினும் அப் பாடல் படிப்பவர்களுக்கு நிலையான பயனை வழங்கவில்லையானால் அவப் பாடிலாகவ்ே அவை முடியும். அதே நேரத்தில் அறவுரை கூறுவதை வெளிப்படையாகத் தெரிவித்துக் கொண்டு முத்திரிக் கொட்டைபோல் நீதி வழங்கத் தொடங் கினால் சிறந்த பாEல் என்ற இலக்கணத்திலிருந்து வழுவிவிE நேரிடும். ஆகவேதான் போலும், தாம் எக் காரணத்தைக் கொண்டு இதனைப் பாடத் தொடங்கினார் என்று சேக்கிழார் தெரிவிக்கவே இல்லை. பாடல் நயத்திற்காக மக்கள் படிக்கத் தொடங்கினால், பாடலின் உட்பொருள் தானே சென்று மக்கள் மனத்தில் தங்கிவிடுமென்ற பேருண்மையைச் சேக்கிழார் நன்கு அறிந்து இருந்தார். அதனால்தான் போலும் உவமை கூறவேண்டிய இடங்களிலெல்லாம் பக்திச் சுவை சொட்டும், வாழ்வை நன்னெறிக்கண் செலுத்தும் உவமைகளாகவே பாடிச் செல்கின்றார். வானம் இருண்டது என்பதற்கு ஒர் உவமை கூறவேண்டுமானால் 'அஞ்சு எழுத்தும் உணரா அறிவினார் நெஞ்சம் என்ன இருண்டது நீண்ட வான்' என்று பாடிச் செல்கிறார்.