பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தேசீய இலக்கியம்
1. தோற்றுவாய்


உலகில் மக்கள் பேசும் அனைத்து மொழிகளிலும் கடவுள் சம்பந்தமான இலக்கியம் உண்டு. இவ்வகை இலக்கியத்தைச் 'சமய இலக்கியம்' என்று கூறலாம். தமிழை அல்லாத வேறு மொழிகளில் ஏனைய இலக்கியுங்களோடு சமய இலக்கியமும் உண்டு. ஏனைய இலக்கியங்கள் மிகுதியாகவும் சமய இலக்கியங்கள் ஒரளவு குறைவாகவும் இருக்கும். ஆனால், தமிழ் மொழியில் சமய இலக்கியம் ஏனைய இலக்கியத்தோடு போட்டிபோடும் அத்தனை அளவுக்கு மிகுந்திருக்கிறது. உலக மொழிகளில் மிகச் சிறந்த அதிகமான பக்திப் பாடல்கள் தமிழில் தான் இருக்கின்றன. வெறும் தமிழில் மட்டும் கற்றவர்கள் தம் மொழிப்பற்றினால் இதனைக் கூறுகிறார்கள் என்று கருதிவிட வேண்டா. திருவாசகத்தை எலும்பு உருக்கும் (bone melting) பாட்டு என்று கூறிய கிறிஸ்துவப் பெரியார் ஜி. யூ. போப், அவர்களிலிருந்து திரு. சி.பி. இராமசாமி ஐயர் வரை பலருங் கூறிய உண்மையாகும் இது.

சங்க இலக்கியம் என்று கூறப்படும் தொகுப்பினுள் பத்துப் பாட்டில் 'திருமுருகாற்றுப்படை' இருக்கிறது. ஏனைய 'புறநானூறு', 'நற்றிணை' முதலிய எட்டுத்தொகை நூல்களுள் கடவுள் வாழ்த்துக் காணப்படுவதோடு நூலுள்ளும் ஆங்காங்கே கடவுள் பற்றிக் குறிப்புகள் காணப்படுகின்ற்ன. இவற்றையடுத்து இரண்டாம் நூற்றாண்டில் தோன்றியதாகக் கூறப் படும் சிலப்பதிகாரத்திலும் கடவுள் பேசப்படுகிறார் அவரை வழிபடும் பல்வேறு கூட்டித்தாரின் (பாலைவனத்தில் வேடர் - 1-اس-۰ تقر3)