பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 3. முதலிய நூல்களில் எவை சமயத் தொடர்பு இல்லாதவை? புரட்சி செய்து கவிதையிலும் புரட்சியைப் புகுத்திய கவியரசர் பாரதியாரும் பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம்' என்று பாடிவிட்டு, அடுத்த அடியிலேயே பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்’ என்றல்லவா பாடினார். அவ்வாறாயின், சமயம் இல்லை என்று கூறிக்கொண்டு வெளி வரும் நூல்கள் இல்லையா என்று கேட்கலாம். இவ்வாறு கூறும் நூல்கள் அன்று இல்லை; இன்று உண்டுதான். ஆனால், இவை காலத்தை வென்று நிற்குமா என்பது வினா? தமிழ்மொழியில் தோன்றிய இவ்விலக்கியங்கள் ஒருபுற மிருக்க, தொல்காப்பியம் முதல் புறப்பொருள் வெண்பா மாலை ஈறாக உள்ள இலக்கண நூல்களும், சூடாமணி’ பிங்கலந்தை நிகண்டுகளும் (அகராதிகள்) சமயத்தொடர் புடையவையே இவை ஒருபுறம் இருக்க, வேற்றுச் சமயத்தவர்கள் இயற்றிய நூல்களும் சமயத் தொடர்புடையன வாகவே உள்ளன. கிருஷ்ணப்பிள்ளை இயற்றிய இரக்ஷண்ய யாத்திரீகம் முதல் உமறுப் புலவர் செய்த சீறாப்புராணம்’ வரை அனைத்தும் சமய இலக்கியங்களே. அவ்வாறாயின், தமிழ் நூல்களில் சமயத் தொடர்பு இல்லாத நூல்களே இல்லையா என்று கேட்கலாம். இருபதாம் நூற்றாண்டில் சில அரசியல் கொள்கைக்காரர்கள் எழுகியவை தவிர வேறு இல்லை. ஆனால், இவர்கள் எழுதிய நூல்கள் பழைய நூல்கள் போல் காலத்தை வெற்றி கொண்டு நிலைத்து நின்று இலக்கியம்' என்ற பெயரைப் பெற முடியுமா? என்றால், காலந்தான் இதற்கு விடை கூற முடியும் ஆனால், இந்நூல்களுள்ளும் பல தாம் தோன்றிய காலத்தில் பெற்ற மதிப்பை நாலு ஐந்து ஆண்டுகளுக்குள் இழந்து விட்டன என்பதைக் காணும்பொழுது பிற்காலத்தில் இவை நிலைத்து நிற்குமா என்ற ஐயம் புலப்படுகிறது தமிழ் நூல்களில் சமயத் தொடர்பு எவ்வளவு தூரம் இருந்து வந்தது என்பதை இதுவரை கண்டோம். தமிழ்