பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தேசிய இலக்கியம் இலக்கிய உட்கோள் இது என்று அறிந்த பிறகும் மீண்டும் சங்க காலத்திற்குச் செல்வோம். -


2. சங்கப் பாடலும் சமயப் பாடலும்


சங்க காலம் என்று கூறப்பெறுகிற காலம் கி.பி. முதல் நூற்றாண்டோடு முடிவடைந்துவிட்டது கி பி. இரண்டாம் நூற்றாண்டில் சிலப்பதிகாரமும், அதனை அடுத்து மணி மேகலையும் தோன்றின. இந்த இரண்டு பெருநூல்களுக்குப் பின், ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகள் தமிழ் இலக்கியப் பூங்காவில் சிறந்த மலர் ஒன்றும் பூக்கவில்லை. காரணம் தமிழை ஆதரியாத களப்பிரர் என்ற இனம் தமிழ்நாட்டில் கால்கொண்டு செங்கோல் ஒச்சியமையேயாம். ஏழாம் நூற்றாண்டில் ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் தோன்று கின்றனர். இவர்களை அடுத்தே பெரியாழ்வாரும், அவர் மகளாகிய கோதையாரும் திகழ்கின்றனர். இவர்கள் அனை வரும் தமிழிலக்கியத்திற்குச் சிறந்த நூல்கள் ஆக்கித்தரினும், பழைய சங்க இலக்கிய முறையை விட்டு, முற்றும் புதிய முறையில் கவிதை புனைந்தனர். சங்க காலம் என வழங்கும் காலத்தில் சமயம் இருப் பினும், அது பின்னணியிலேயே இருந்து வந்தது. சமயத் துறையில் அநுபவம் பெற்ற பெரியோர்கள் பலர் திகழ்ந் திருந்தாலும், அவர்கள் பெற்ற அநுபவம் அவர்களுடனேயே இருந்துவிட்டது. உலகத்தார் கண்டு பின்பற்றும் வண்ணம் சமயத் துறையில் இலக்கியங்கள் தழைக்கவில்லை. திருமுரு காற்றுப்படையும் பரிபாடலில் சில பாடல்களும் தவிர, கடவுளரைப்பற்றிப் பேசும் நூல் ஒன்றும் தோன்றவில்லை இவ்வளவு பெரிய தமிழ் இலக்கிய உலகில் சமயம் பற்றி மட்டும் பேசக்கூடிய நூலொன்றும் தோன்றாதிருந்தது விந்தையே! அக் காலத்தில் சமயம் என்பது தனிப்பட்ட மக்களின் பண்பாக மிகுதியாக இருப்பினும், கூட்டமாகச்