பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சி. ஞானசம்பந்தன் 等 சமயத்தைப் போற்றும் வழக்கம் குறைவாகவே இருந் திருக்கும்போலும் என்றுகூட நினைக்க இடம் தருகிறது. அவ்வாறு இருந்தமையினாலேதான் பெருநூல் செய்த திருவள்ளுவர், இளங்கோ மு. த வி ய பேராசிரியர்கள் அனைவரும், தத்தம் சமயத்தை வெளிப்படையாகக் கூறாமலே இருந்துவிட்டனர் போலும் இவ்வகை மரபு அப்பொழுது நிலைபெற்றிருந்தது, சமயச் சகிப்புத் தன்மைக் குச் (Religious tolerence) சிறந்த வாய்ப்பைத் தந்தது எனலாம் இவ்வாறு கூறுவதால் சமய உணர்ச்சியே இல்லா திருந்த காலம் அது என்ற தவறான முடிவுக்கு வந்துவிடல் ஆகாது. பல சங்கச் செய்யுட்களில் இறை வணக்கம், கடவுளர் பெயர்கள் முதலியவை வருகின்றன. தம் சமயத்தை உயர்த்திப் பேசுதலும் , பிற சமயத்தைத் தாழ்த்திப் பேசுதலும் சங்க நூல்களிலும், அதனை அடுத்த சிலப்பதிகாரத்திலும் காணப்பெறாதவை சிலப்பதிகாரத்தில் மாங்காட்டு மறையவன் கூற்று, தன் சமய உயர்வைக் குறிப்பாகக் கூறுவதன்மூலம் பிற்காலச் சமயப் பூசலுக்கு முன்னோடியாக அமைகின்றது. சமயப் பொறையினை வற்புறுத்தற்கே இளங்கோவடிகள் இந் நிகழ்ச்சி அமைத்தார்; எனினும், பின் வரப்போகும் பூசலை அறிமுகம் செய்வதாகவும் அமைந்துள்ளது. இத்தகைய வழக்குக்குப் பிள்ளையார் சுழி இட்டவர் மணிமேகலை ஆசிரியர் சாத்தினாரே ஆவர். அவர் காலம்வரையில் இலக்கியம், சமயப் பிரசாரத்திற்கு இடந் தரவில்லை. இலக்கி யத்தில் சில பகுதிகளில் சமயம் இடம் பெற்றதுபோக, சமயத் தைப் பரப்ப இலக்கியத்தை ஒரு கருவியாகச் செய்த நிலைக் குச் சாத்தனாரே முழுப் பொறுப்பாளியாவர். சமயத்தைப் பரப்புவதையே தம் முக்கிய நோக்காகச் சாத்தனார் கொண்டுவிட்டமையால் பிற சமயங்களைக் குறைத்துப் பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது. பிறகு தோன்றிய நூல்களும் இவ் வழியைப் பின்பற்றத் தொடங்கின. சங்க காலத்தில் நிலைபெற்றிருந்த தனிப்பட்டவர் போற்றும் சமயம், ஏழாம் நூற்றாண்டில் மெல்ல மறையத்