பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 9. ஆகியவற்றுடன் வேறுபட்டவனல்ல; ஆதலின் தோற்ற நாட்டினர் ஒரளவு துன்பம் உறினும் உடனே தங்கள் துன்பத்தை மறந்துவிட்டனர். பழைய ஆட்சிக்கும் புதிய ஆட்சிக்கும் இடையே அவர்கள் வேறுபாடு ஒன்றையும் காண இயலவில்லை. எனவே, அவ்வமைதி அவர் கவிதை யிலும் பிரதிபலிப்பதைக் காண்கிறோம். சங்க காலத் தமிழன் பழுமரம் தேரும் பறவைபோல இன்பம் ஒன்றையே நாடிக் காலத்தைக் கழித்தான். ஆனால் ஏழாம் நூற்றாண்டு இவ்வகை வாழ்க்கையை அடியோடு மாற்றிவிட்டது. பல்லவப் பேரரசு தழைத்துநின்ற அக்காலத்தில் தமிழ்ப் பண்பாட்டில் ஒரு புதிய மாறுதல் கருக் கொள்ளலாயிற்று. உலகமும் அதிலுள்ள இன்பமும் நிலையாமை உடையன ாேன்ப்தைத் தமிழன் தன் நாட்டு ஆட்சி மாறுதல்களினா லேயே உணரத் தொடங்கினான். குறிக்கோளோடு உலக இன்பத்தில் தோய்ந்த சங்க கால நிலைமை, இடைக்காலத்தில் மாறி, கேவலம் இன்பம் ஒன்றையே மதிக்கும் நிலை ஏற் பட்டது. குறிக்கோள் தவறிய இன்பம் விரைவில் புளித்து விடுதல் இயற்கையன்றோ? அது புளிக்கவே, எஞ்சியது வெறுப்பு ஒன்றுதான். ஆனால், வெறுப்பு மட்டும் ஆக்கம் தராது. ஆதலின் ஆன்ம ஒருமைப்பாட்டில் தமிழ் மக்கள் விருப்பம் கொள்ளத் தொடங்கினர். அதன் பயனாக, வாழ்க்கை முறையும் குறிக்கோளும் மாறின. அதன் பயனே சமயத்தில் மீண்டும் தமிழன் அடைக்கலம் புகுந்த செய லாகும். அமைதியை நாடி அலைந்த இவ் இனத்திற்கு வேற்று நாட்டில் தோன்றிய சமயங்கள் முதலில் சிறப்புடை யனபோலத் தோன்றினாலும், நாளடைவில் வேண்டாதன. வாயின. வேற்று நாட்டில் தோன்றிய சமயத்தின் சிறந்த அடிப்படையான கொள்கைகள் எ ல் லா ரு ம் ஒப்புக் கொள்ளக்கூடியனவாக இருப்பினும், பல இயல்புகள் அச் சமயம் தோன்றிய அந் நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்றனவாகவே இருக்கும். அத்தகைய சமயம் மற்றொரு நாட்டில் சென்று நிலைக்க முயலும்பொழுது புதிய நாட்டிற்கு ஏற்பத் தன்