பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தேசிய இலக்கியம் புற இயல்புகளை மாற்றிக் கொள்ளாவிடின் அங்கு நிலை பெறுவது அருமை. இக் காரணத்தினாலேயே தமிழ் நாட்டில் புகுந்த எந்தச் சமயமும், சைவமும், வைணவமும் தாழும்படி இங்கு நீண்ட நாள் நிலைத்துநிற்க இயல வில்லை. அவ்வாறு தமிழ்நாட்டில் புகுந்த புதுச் சமயங் களில் உள்ள சிறப்பியல்புகளைச் சைவமும் வைணவமும் ஏற்றுக்கொண்டன. ஆனால், அச் சமயங்களை அப்படியே முழுதும் ஏற்றுக்கொள்ளவில்லை இந்த நாடு. சங்க காலத்திலிருந்து, தமிழன், இன்பத்தையும் அதன் மறுதலையான துன்பத்தையும் ஏற்றுக்கொண்டு, ஒன்றுக்கு மகிழ்தலும் மற்றொன்றுக்கு வருந்துதலும் ஆகிய இயல்புகள் கூடுமானவரையில் தன் வாழ்க்கையில் புகாதவாறு செய் தான். இந்த நடுநிலையே சிறப்புடையது என்ற கருத்துடைய வனாதலால் இன்பத்தை வெறுத்து ஒதுக்குவதே வீடு பேற்றுக்கு வழி என்று அவன் நம்பவில்லை. ஆதலின், அவன் கண்ட கடவுளையும், பெண், ஆண் வடிவாகக் கண்டான். இக் கொள்கை தமிழினத்தில் நன்கு ஊறிவிட்ட மையின் இதற்குப் புறம்பான எதையும் ஏற்றுக்கொள்ள அவன் விரும்பவில்லை இறைவனையே பெண் வடிவில் கண்ட தமிழன், அப் பெண் இனத்தைத் தாழ்ந்தது என்று கருதும் எக் கொள்கையையும் ஆதரிக்க விரும்ப வில்லை. இந்த அடிப்படையில்தான் முக்திக்கு நாயகி ஒர் பெண்பிள்ளை என்று திருமந்திரமும் பாடிச் செல்கிறது. இவற்றை யெல்லாம் அடிப்படையாகக் கொண்டு தோன்றிய சமயப் புரட்சியின் சிகரந்தான் திருத்தொண்டர். புராணமாகும். இதனை ஆக்கிய பெரியார், சோழப் பேரரசில் முதல்மந்தரியாக இருந்த சேக்கிழார் ஆவர். அவரது கவிதை வன்மை முதலியன பெருங் காப்பிய ஆசிரியர் எவர்க்கும் சளையாதவை. ஏனைய ஆசிரியர்கள் செய்த செயலைக்காட்டிலும் அரிய செயல் ஒன்றையும் அவர் செய் தார். அதுதான் பக்திச்சுவைப் பிழம்பாக நிற்கும் காப்பி யத்தைப் பாடியதாகும்.