பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 18 பாட்டு, எட்டுத்தொகை நூல்களுள் ஆசிரியம், கலி என்ற இருவகைப் பாடல்களைத் தவிர ஏனையவற்றைக் காண இயலவில்லை. இசைத் தமிழ் வேறாக வளர்ந்த காலத்தில், இயற்றமிழ்க் கவிதைகள் இசையாடை போர்த்துப் பல்வேறு வகையில் காட்சி வழங்கும் நிலை தேவைப்படவில்லை. பெண் குழந்தை இல்லாதவர்கள் தாமே, தம் ஆண் குழந்தை கட்குப் பெண் வேடம் இட்டுக்களிக்கின்றனர்? ஆனால், இந்நிலை, ஏழாம் நூற்றாண்டில் மறைந்து விட்டமையால் இயற்றமிழிலேயே இசை இடம் பெறும் தேவை பெரிதாயிற்று. அதனால்தான் இசைக்கு இடம் தரும் வன்மை பெற்ற விருத்தப்பா அரங்கமேறித் தன் முன்னோராய ஆசிரியம், கலி முதலியவற்றைத் தலைகாட்டாமற் செய்துவிட்டது. மேலும், மக்களின் வளர்ச்சிக்கு ஏற்பப் பல்வேறு உணர்ச்சிகள், கலப்பு உணர்வுகள் (mixed emotions) தோன்றலாயின. இவற்றை வெளியிட இசை இன்றியமையாததாயிற்று. நான்கு சீரை எல்லையாக உடைய ஆசிரியம் கலப்பு உணர்வுகளை வெளியிடத் தகுந்த கருவியன்று என்பது அனைவரும் அறிந்ததே. ஆதலில், விருத்தப்பாவே பெரு வழக்கினதான ஆளப்பெற்றது. விருத்தப்பாக்களை முதன் முதலாக முழுதும் பயன்படுத்திக் காப்பியம் செய்த பெருமை 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கம்பனுக்கே உரியது. பாடு வதற்குரிய எல்லாப் பொருள்களைப் பற்றியும் பாடல்கள் தோன்றலாம்; என்றாலும் மக்களைப் பற்றிப் பாடும் பாடல்களே எல்லா மொழி இலக்கியங்களிலும் மிக்க சிறப்புற்று வளம் பெற்றன. அதன் காரணம் ஆராயப்பட வேண்டிய இடம் இது அன்று. சங்கப் பாடல்கள் அனைத்தும் மக்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றிப் பாடப் பெற்றவை. தனி மனிதனுடைய முழு வாழ்க்கையையும் அடிப்படையாகக் கொண்டு தோன்றிய முதல் நூல் சிலப்பபதிகாரமேயாகும். அதிலும், கோவலன் கண்ணகியினுடைய பிறப்பு, வளர்ப்பு முதலியனபற்றி ஒன்றும் கூறாமல், காப்பியம், திருமணத்தில் தொடங்கப்பெறுகிறது. அதனை அடுத்துத் தோன்றிய மணி மேகலையும் அத்தகையதே. இம்முறைக்குமாறாக காப்பியக்