பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தேசீய இலக்கியம் என்னாத இயற்பகை", வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருள்: என்பன போன்றவை அவ்வந் நாயனாரின் வாழ்க்கையில் உயிர்நாடியாக இருக்கும் பகுதியைப் புலப்படுத்துகின்றன. இன்னும் சில இடங்களில் பருப்பொருளாகச் சரிதத் தைக் கேட்பவர் தவறான சில முடிவுகட்கும் வருதல்கூடும். மெய்ப்பொருள். நாயனாரின் வரலாற்றைக் கேட்டவுடன் முத்திநாதன். என்ற பகைவனால் வஞ்சகமாக வெல்லப் பட்டவர் என்றும், கண்ணப்பர் என்றவுடன் படிப்பில்லாத வேடர் என்றும், தண்டியடிகள் என்றவுடன் குருடர் என்றும் நினைவு தோன்றுதல் இயற்கையேயாகும். தொகை பாடிய சுந்தரர் இச் சரிதங்களை நினைவுகூர்ந்து பாடின துடன், இத்தகைய முடிவுகள் மனத்தில் வராமல் இருக்கத் தக்கபடி அடைமொழிகளை இவ்வடியார்களுக்குக் கூறிச் செல்லுதல் வியக்கத் தகுந்தது. வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருள் என்று சுந்தரர் கூறினதைக் காண்க. படி யாத வேடராகிய கண்ணப்பரை, கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர் என்றும் குருடராகிய தண்டியடிகளை, நாட்ட மிகு தண்டி என்றும் சுந்தரர் குறித்துச் சொல்வது. எதனை அறிவுறுத்துகின்றது?’ சுந்தரர் திருத்தொண்டத் தொகை யைச் சாதாரணமாகப் பாடவில்லை என்றும், இவ்வடியாருள் சிலரைத் தேவாசிரிய மண்டபத்தில் அவர் சந்தித்த செய்ல் அவருடைய வாழ்க்கையைத் திசைமாற்றித் திருப்பும் சிறப்பு வாய்ந்தது என்றும், அவர்கள் ஒவ்வொருவருடைய வரலாற் றையும் சுந்தரர் நின்று நினைந்து பாடுகிறார் என்றும் நினைக்க இடந்தருகின்றன. தம் காப்பியத் தலைவரின் வாழ்க்கைத் திருப்பத்திற்குக் காரணமான இவர்கள் வரலாற்றைச் சேக்கிழார் கூறினதில் அவர் இயற்றிய காப்பியத் இன் இயல்பு குறைந்துவிடாமை காண்க. மேலும், ஏனைய பெரியோர்கள் போல் சுந்தரரும் தம் ஆன்ம முன்னேற்றத்தை மட்டும் கருதிப் போய் இருப்பாரேல் பொதுவாகத்தமிழ் உல்கும் 1 இக் கருத்தை 40 ஆண்டுகட்கு முன்னர்க் கூறியவர் என் தந்தையாராவார். -