பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 31 அசைவில் செழுக் தமிழ்வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல, (பெ.பு.--திருஞான; 23, 24) அவர் தோன்றினார் என்றல்லவா குறிக்கிறார்? இம்மட்டோ? தீந்தமிழ் சிறக்கவரு நாயகன் ஒதாது உணர்ந்த முத்தமிழ் விரகன் அருந்தமிழ் ஆகரர், தமிழ் விரகர் என்றெல்லாமல்லவா பெரிய புராணம் திருஞான சம்பந்தரைக் குறிக்கிறது? தில்லைவாழ் ஆந்தணர்களைக் கூறவந்தவிடத்து தென் தமிழ்ப் பயனாய் உள்ளவர் என்றும், திருநாவுக்கரசரை தமிழ் ஆளியார் என்றும் அல்லவா குறிக்கிறது? எனவே பெரிய புராணம் பிற்காலத்தில் தோன்றிய ஸ்தல புராணங்கள் போன்றது அன்று என்பதும், தமிழ னுடைய மானத்தைக் காக்கும் சிறந்த தேசீய இலக்கியம் என்பதும் இதனால் வெளிப்படுகின்றன. தேசீய இலக்கிய மாகிய இது, அத் தமிழனுக்கே உரிய பக்தியாகிய சுவையைப் பாடியது.


5. பக்திச்சுவை பாடும் நூல்


சுவை மிகுந்த இலக்கியங்கள், எல்லா நாடுகளிலும் எல்லா மொழிகளிலும் நிரம்ப உள்ளன. ஒன்பது சுவைகளை எப் பெயர்களால் வழங்கினாலும் அவை இலக்கியத்தில் மலிந்து உள்ளன. காப்பியங்களும், பெருங்காப்பியங்களும் இச் சுவைகள் ஒன்பதும் விரவி ஆக்கப்பெறுகின்றன. என்றாலும், ஒவ்வோர் இலக்கியத்திலும் ஒவ்வொரு சுவை மிகுந்துக் காணப்பெறுதல் இயல்பு மனிதன் ஒவ்வொருவனும் பல பண்புகள் நிறையப்பெற்றவனே. ஆனாலும், அந்தப் பல பண்புகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொன்று மிகுதியாக இருத்தலைக் காண்கிறோம். ஒருவனைப் பற்றிப் பேசும்பொழுது, மனிதன் நல்லவன்தான்; இ. ந்தாலும்