பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

så தேசிய இலக்கியம் கொஞ்சம் முன்கோபம் அதிகம்' என்றும், 'கொஞ்சம் அவசர புத்தி' என்றும் கூறக் கேட்கிறோம் அல்லவா? இங்ஙனம் கூறுவதால் கூறப்பட்டவனிடம் வேறு பண்புகள் ஒன்றும் இல்லை என்பது கருத்தல்லவே. பல இருந்தும் அவனிடம் இப் பண்பு சிறப்புற்றது என்பதே கருத்தாகும். காப்பியத்தைப் பருப்பொருளாக நோக்குமிடத்து இந்தச் சிறப்பியல்பே நன்கு தெரியும். உட்சென்று காணுங்கால் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு சுவை இருத்தலைக் காணலாம். ஆனால், முன்னர்க் கூறிய சிறப்புச் சுவை, காற்றைப்போல, காப்பியம் முழுவதும் நிறைந்து காணப்படும். காற்று எங்கும் இருப்பினும் ஒவ்வொரு சமயத்தில் மிகுதியாக அடிப்பதுபோல, காப்பியத்தின் சில இடங்களில் இச் சிறப்புச் சுவை மிகுதியாக இருக்கும். காற்றும் எங்கும் நிறைந் திருப்பதை நாம் ஓயாது உணர்வதில்லை; ஆனால், அதை அறியப் புறப்பட்டவுடன் எங்கும் இருப்பதை அறிகிறோம். இதேபோலக் காப்பியங்களில் உள்ள சிறப்புச் சுவை எங்கும் நிறைந்திருப்பினும் நாம் அதனைக் காணாமல் இருத்தலும் கூடும். காண முயன்றவுடன் அதன் இ ய ல் ைப க் காண்கிறோம். கம்பனது அரிய இராமாயணம் மிகப் பெரிய காப்பியமாக இருப்பதால் ஒவ்வொரு காண்டத்திலும் ஒவ்வொரு சுவை மிகுதியாக அமைந்துள்ளது. பருப் பொருளாக நோக்குமிடத்து எந்தச் சுவை மிகுதியென்று கூற முடியாமற் போய்விடுகிறது. சிந்தாமணி அவ்வாறு இல்லை, துறவு பூண்ட பெரியார் ஒருவரால் அப் பெருங்காப்பியம் இயற்றப்பெற்றிருப்பினும், இன்பச் சுவை அக் காப்பியத்தின் சிறப்பியல்பு என்பதை அனைவரும் அறிவர். சிலப்பதி காரத்தில் அவலச் சுவை சிறப்புப் பெற்றிருத்தலையும், மணிமேகலையில் பெருமிதம் சிறப்புப் பெற்றிருத்தலையும் ஆராய்ந்து காண்பார் எளிதில் உணரலாம். மேலே கூறிய காப்பியங்களில் காணப்படாத ஒரு சிறப்புச் சுவை பெரிய புராணத்தில் மிளிர்கிறது. ஒன்பது