பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சக்-ஞானசம்பந்தன் 33 சுவை இன்னவை என்று இலக்கணம் கூறுபவர் இச்சுவையை எதனுள் அமைப்பார்களோ தெரியவில்லை. பெரிய புராணம் இச் சுவையையே சிறப்பியல்பாகக்கொண்டு விளங்குவதை முதன்முதல் உணர்ந்து நமக்குக் கூறிய பெருமை மகா வித்துவான் ஜீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களையே சாரும். தம் சேக்கிழாரிபிள்ளைத்தமிழில், 'பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப் பாடிய கவிவலவ’ என்று அவர் கூறினார். இங்ங்ணம் கூறுவதால் ஏனைய சுவைகள் பெரிய புராணத்தில் இல்லையோ என்று ஐயுற வேண்டா. இச் சுவை தனி சொட்டுகிறது' என்றமையின், ஏனைய சுவைகள் தத்தம் அளவுக்கு ஏற்பச் சொட்டுகின்றன என்றே கொள்ளவேண்டும். பெரிய புராணம் முழுவதும்.பக்திச் சுவை பல இடங்களில் எல்லையற்றுச் செல்கிறது. சேக்கிழார் மேற்கொண்ட காப்பியப் பொருள். இவ்வாறு அவர் கவிதை புன்ைய மிகுதியும் இடந்தரு கிறது. கம்பநாடன் மேற்கொண்ட கதை அவன் விரும்பிய பல் சுவைக்கும் இடம் தந்து நிற்பதுபோல், திருத்தொண்டர் வரலாறுகள் பக்தியாகிய சுவை திறக்க வசதி அளிக்கின்றன. இவ் உலகைப் பொறுத்தவரை இலக்கியங்களிலும் மக்கள் வாழ்விலும் மிகுதியாகக் காணமுடியாத சரக்கு பக்தியாகும். ஆகவே, அதனைப்பற்றிக் கவிதை புனைவது கடினம். கவிஞன் எந்தப் பொருளிலும் தான் முதலில் ஆழ்ந்து அநுபவித்துப் பிறகுதான் தன் அநுபவத்தைக் கவிதையாக வடிக்கிறான். ஆனால், பலரிடமும் காணப் பெறாத பக்தி என்ற இந்தச் சுவையில் கவிஞன் எவ்வாறு மூழ்க இயலும்? வாழ்க்கையில் காண இயலவில்லை என்றால், இலக்கியத் திலாவது அதிகம் பயிலும் அளவிற்கு இது இருக்கிறதா, என்றால் அதுவும் இல்லை. சங்க இலக்கியங்கள் சிந்தாமணி தேவாரம், திருவாசகம்முதலிய நூல்களில் சேக்கிழார் நன்கு தோய்ந்துள்ளார். என்றாலும்,தேவாரதிருவாசகங்களைத் தவிர ஏனைய இலக்கியங்கள் பக்திச்சுவை அமைந்தன அல்ல. தேவார திருவாசகங்களும் அவற்றை இயற்றிய பெரியோர்கள் தேசீ.-3