பக்கம்:தேசிய இலக்கியம்-பெரியபுராணம்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தேசீய இலக்கியம் தம் சுய அநுபவத்தில் ஆழ்ந்து நிலைத்ததன் பயனாகத் தோன்றிய நூல்களாகும். எனவே, அவை அகப் பாடல் என்று கூறத்தக்கவை. புறப்பாடல் (objective poetry) தொகுதியில் சேர்ந்த ஒரு காப்பியமாவது பக்திச் சுவையைச் சிறப்பியல் பாகக் கொண்டு விளங்கவில்லை. சேக்கிழார்க்குப் பின்னும் இத்தகைய நூல் தோன்ற வில்லை என்றால் அதற்கு எ ன காரணம் என்பது ஆராய்ச்சிக்கு உரியதே. நால்வர்களைப் போலவே பன்னிரண்டு ஆழ்வார்களும் அருள் நூல்கள் அருளியிருப்பினும் காப்பிய முறையில் பக்தி நூலாக இலங்குவது பெரிய புராணம் ஒன்றுதான். அதற்கு முன்னும் இத்தகைய நூல் ஒன்று இல்லை. அதற்குப் பின்னரும் இதுவரை இல்லை. தனிப் பட்டவர் அநுபவத்தில் ஏற்பட்ட அன்புப் பெருக்குக் காரண மாகத் தோன்றிய பக்திப்பாடல்கள் நால்வருக்கு முன்னர் அதிகம் இல்லை என்றாலும், ஒரளவு உண்டு என்பதை அறிவிக்கத் திருமுருகாற்றுப்படையும், பிற்காலத்தில் வரதுங்கராம பாண்டியர் இயற்றிய குட்டித் திருவாசகம்: என்னும் திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாந்தி போன்ற பிற பாடல்களும் இருக்கின்றன. பழங்காப்பியங்களில் ஒன்றாவது பக்தி நூலாக இல்லை என்று கூறினோம் அல்லவா? தமக்கு வழிகாட்டியாக ஒரு நூலும் இல்லாத காலத்திலும் சேக்கிழார் இத்தகைய அரிய நூல் ஒன்றை இயற்றியுள்ளார். ஆனால் அவருக்குப் பின்னர்த் தோன்றிய நூற்றுக்கணக்கான நூல்களுள் ஒன்றாவது இவ் வழியை மேற்கொள்ளாதது ஏன்? சேக்கிழார்க்குக் கிடைத்த வரலாறு போன்ற வரலாறுகள் பிற்காலப் புலவர்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறுவது தவறாகும். எத்தனையோ பெரியோர்கள் அறுபத்து மூவருக்குப் பின்பும் தோன்றி யுள்ளனர். அவர்களைப் பற்றி நூல் இயற்றி இருக்கலாமே. பெரியார் வரலாறு ஒன்றுமே அகப்படவில்லை என்பதை வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும், சேக்கிழாருடைய