பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

99


அவர்கள் அரசியல்வாதிகளானாலும் சரி, ஆன்மிகவாதிகளானாலும் சரி, ஆசிரியன்மார்களானாலும் சரி, அறிஞர் அணிகளானாலும் சரி, எவரை அழைத்தாலும் அவர்களது உரை தரம், திறம்கட்கு ஏற்ப போக்கு வரத்து செலவு என்ற பெயரில் கூட்டம் நடத்துவோரது அறிவுக் கரம் நீளும் - குறையும்.

ஆனால், அமெரிக்காவிலே அறிஞர்கள் பேசும் அரங்கங்களில் உரை கேட்க வருவோர் கட்டணம் கொடுத்து கூட்டம் கேட்கும் பழக்கமும் இருந்தது.

அறிவாற்றல் மிக்கவர்களது 'நா' நய உரைகளுக்குக் கட்டணம் கொடுத்துப் பேசுவோரை அழைக்கும் கட்டாயத்தை, அமெரிக்க நாட்டில் இராபர்ட் க்ரீன் இங்கர்சால் என்ற நாவலன் தான் உடைத்தெறிந்தான்!

சிரம் பழுத்த அறிஞர்களின் பொழிவுகளைக் கேட்க வரும் அறிவு வேட்கையாளரிடம் - சுவைஞர்களிடம் காசு வசூலிக்கும் காலத்தை உருவாக்கியவர் நாவுக்கரசன் இங்கர்சால்.

அதாவது, பணம் கொடுத்து - அறிஞனை, உரைளுனை அழைக்கும் நாகரிகத்தை மாற்றி, பேசும் அறிஞரின் பேச்சை, உரைஞனுடைய உணர்ச்சிகளை, நாவலர்களின் 'நா' நயத்தை, 'நா' நடன எழில்கள் தவழும் நாவாடல் வகைகளைக் காசு கொடுத்துக் கேட்கும் தகுதி இருந்தால் வா - அரங்கத்துக்குள்ளே என்ற - அறிவு நாகரிகத்தை நிலை நாட்டியவர் அமெரிக்க நாட்டின் 'நா' வேந்தன் இங்கர்சால்.

அதே ‘நா’ பரதமாடும் சொல் ஆட்சிகளை, 'நா' நடன எழிற் காட்சிகளை, அவரது நா பாடும் இராகமாலிகா நய ஓசை தென்றல் சுகங்களை, ‘நா’ உதிர்க்கும் மாணிக்க மதிப்புள்ள வாசக மாண்புரைகள், செம்மொழி ஆட்சியின் அடுக்கல்களை, உவமை அணிகளை, அலங்காரத் தமிழ் அழகுகளை வரலாறா? இலக்கியமா? மேல் நாட்டார் கண்டு நம்மை மேம்படுத்தும் புதுமைகளா? அனைத்தையும் அவாவோடு கேட்க - வாருங்கள், பணம் கொடுத்துக் கேளுங்கள் என்று; தமிழ்நாட்டில் முதன் முதல் அழைத்தவர் அறிஞர் அண்ணா. அறிஞர் அண்ணாவின் அற்புத உரைகளை அறிவாளிகள் செவிமடுக்கச் சாரி சாரியாக வந்தார்கள். தமிழ்நாட்டில் உள்ள சென்னை கோகலே மன்றத்துக்கும்,