பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



மத்திய முதல் நிதியமைச்சர்
சர். ஆர்.கே. சண்மூகம் திறந்தார்!

இந்திய அரசாங்கத்தின் முதல் நிதியமைச்சரும், கோயம்புத்தூர் நகரிலேயே வாழ்ந்து வந்த தொழில் அதிபருமான சர்.ஆர்.கே. சண்முகம் செட்டியார் அவர்கள்தான், இந்தத் தொழிற்சாலையின் துவக்க விழாவை நடத்தி வைத்தார் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

அந்தத் தொழிற்சாலையில், வானொலிப் பெட்டி, வானொலிக் கிராமம், டேப் ரிக்கார்டர், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வானொலிப் பெட்டிகளை ஏழை மக்களும் உபயோகப் படுத்தக் கூடிய அளவுக்கு விலை குறைவானவை ஆகும்.

நூறு ரூபாய் அல்லது நூற்றைம்பது ரூபாய்க்கு, ஏழைகள் வாங்கக் கூடிய வகையில் இவை விலை குறைவானது மட்டுமன்று; இந்த வானொலிப் பெட்டியின் ஐந்து வால்வும், 3 பேண்டுகளும், எந்த அலையைத் திருப்பினாலும் பாடக் கூடியதாகவும், அதே நேரத்தில் குளு குளு தன்மையான ஏ.சி. பெட்டிகளாகவும் தயாரிக்கப்பட்டு அதே விலைக்குக் கிடைக்க வழி செய்தவர் ஜி.டி. நாயுடு.

ஏழைகளுக்காகத் தானே தயாராகின்ற வானொலிகள், என்று, ஏதோ - ஏனோ தானோவாக உருவாக்கப்பட்டதன்று ஜி.டி. நாயுடு நிறுவனம் உற்பத்தி செய்த இந்தப் பெட்டிகளின் தரம்!

இந்தத் தொழிற்சாலையில் தயாராகும் வானொலி பெட்டிகளுக்குரிய பாகங்களில் 30 முதல் 35 சத விகிதப் பொருட்கள் வரை; இதே தொழிற்சாலையிலேதான் தயாராகின்றன. மிகுதி உள்ள 65, 70 சத விகித பாகங்கள் மேற்கொண்டு அங்கேயே தயாராகிடுவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டு ஆய்வுக் குழுவின் ஆய்வுக்குச் சென்றிருந்தன.

கார்பானிக் பொருட்கள்
தொழிற்சாலை :

கோவைக்கு அடுத்துள்ள நகரம் போத்தனூர். இந்த ஊர் தொழிற்சாலை நடத்திட எல்லா வசதிகளும் பொருந்தியதாக