பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

107


இருந்ததைக் கண்ட ஜி.டி. நாயுடு, இங்கே கார்பானிக் பொருட்கள் தொழிற்சாலை ஒன்றைத் துவக்கினார். டைப் ரைட்டர் இயந்திரங்களுக்குத் தேவையான கார்பன் தாள்கள், நாடாக்கள், பேனாக் கார்பன், பென்சில் கார்பன் தாள்கள், இங்க் பேடுகள் போன்றவை இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டன.

யு.எம்.எஸ்.
பிளேடு தொழிற்சாலை :

கோவை நகரில் மலிவான சவர பிளேடுகளைத் தயாரிக்கும் தொழிற்சாலையை சிறு அளவில் ஏற்படுத்தினார். தமிழ் நாட்டுக்குத் தேவையான பிளேடுகள் விற்பனைக்காக இங்கே தான் தயார் செய்யப்பட்டன.

கோவை டீசல்
புராடக்ட்ஸ்

பெட்ரோலில் கார்களை ஓட்டும் இஞ்சின்கள் அப்போது பொருத்தப்பட்டிருந்தன. அதற்குப் பதிலாக டீசல் எண்ணெயில் ஒட்டும் இஞ்சின்களைத் தயாரிப்பதில் ஜி.டி.நாயுடு ஈடுபட்டார்.

அதற்குரிய இஞ்சின்களைக் கோயம்புத்துரிலேயே தயாரிக்கும் வகையில் இஞ்சின்களைப் புதுப்பித்தார். அவை பழுது பார்க்கும் பணிகளை இந்த தொழிற்சாலையிலே செய்தார். இந்தத் தொழிற்சாலையை ஜெர்மானியத் தொழில் நுட்ப அறிஞர்கள் பார்த்துப் பாராட்டினார்கள்.

இஞ்சினியரிங்
பிரைவேட் லிமிடெட் :

மேற்கண்ட டீசல் இஞ்சின்களுக்குத் தேவைப்பட்ட நாசில்கள், Nozzles, டெலிவரி வால்வுகள், பம்ப் - எலிமெண்டஸ் Pump-Elements ஆகியவை - தொழிற்சாலையில் உருவாயின.