பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

109



இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கடிகாரங்கள் சில, பொது நிலையங்களின் உபயோகத்திற்கான அன்பளிப்பாக வழங்கப்பட்டிருக்கின்றன.

கோவை நகராட்சிக்கு ஒரு கடிகாரத்தை ஜி.டி.நாயுடு தயாரித்துக் கொடுத்துள்ளார். அந்தக் கடிகாரம் கோவை நகரில் அவினாசி சாலையையும், சிறைச் சாலை சாலையையும் சந்திக்கும் இடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.

இன்று வரை அந்தக் கடிகாரம் எந்தப் பழுதும் அடையவில்லை. இது போன்ற மேலும் சில கடிகாரங்களை சென்னை நகருக்கும் அன்பளிப்பாக நாயுடு வழங்கியுள்ளார். இந்தத் தொழிற்சாலையில் பெருமளவில் கடிகாரங்கள் தயார் செய்யப்பட்டன.

கோவை ஆர்மச்சூர்
வைண்டிங் ஒர்க்ஸ் :

இந்தத் தொழிற்சாலையில் செப்புக் கம்பிகள் தயாரிக்கப்படுகின்றன. இவை பல வகை அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன. இந்தக் கம்பிகள் எதற்குப் பயன்படுகின்றன தெரியுமா?

டைனமோக்கள் உருவாக இந்தக் கம்பிகள் தேவை. அதற்காகவே இங்கே பல அளவுகளில் செப்புக் கம்பிகள் தயாரிக்கப்படுகின்றன. அந்த செப்புக் கம்பிகளுக்கு எனாமல் பூசும் இயந்திரங்களை நிறுவவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இங்கே தேனிப் பெட்டிகளுக்குத் தேவையான பொருட்களும் தயாராகின்றன.

சத்து மாவு
தொழிற்சாலை :

மக்கள் உணவுகளுக்காகப் பயன்படுத்தும் கேழ்வரகு சோளம் போன்ற உணவு தானியங்களை, இங்கே சத்துணவு மாவுகளாகத் தயாரிக்கின்றார்கள். இங்கே தயாரான சத்துணவு மாவைச் சோதனை செய்துப் பார்த்த சென்னை அரசாங்கத்