பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


தின் விவசாய ரசாயன அதிகாரி, அந்த மாவுகள் உயர்ந்த ரகமாகவும், சத்து நிறைந்ததாகவும் இருப்பதாகச் சான்றிதழ் தந்துள்ளார்.

வேறு சில
தொழில்கள் :

பேருந்துகளுக்கான பாகங்களை இணைக்கவும், டயர்களைப் புதுப்பித்து உருவாக்கவும், தனித்தனி தொழிற் சாலைகளை திரு. ஜி.டி. நாயுடு உருவாக்கினார்.

வெளிநாடுகளில் இருந்து மற்ற தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்யவும் ஜி.டி. நாயுடு தொழில் நிலையங்களை அமைத்தார்.

தொழிற்சாலைகளைப் புதியதாக அமைக்க யாராவது முன் வந்தால், அவர்களுக்கான உதவிகளை யோசனைகளை இலவசமாகவும் செய்தார் திரு. நாயுடு.

இவ்வளவு அக்கரையோடு கோவையை ஏன் தொழில் நகரமாக்கிட வழி வகைகளைச் செய்தார்?

தொழில் வளர்ச்சி நமது நாட்டில் ஏற்பட்டால்தான் மக்களுடைய வறுமைகள் ஒழியும் என்ற ஒரே காரணத்திற் காகத்தான் ஜி.டி.நாயுடு அதில் அவ்வளவு அக்கரைகளைக் காட்டினார்.