பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


புகழ்பெற்ற விந்தை மனிதராக விளங்கினார் திரு.நாயுடு அவர்களின் இந்த கல்வித் தொண்டு தொழிந் பரட்சிக்குரிய அடிப்படை செயலல்லவா?

இன்ஜினியரிங் படிப்பை
இரண்டாண்டாக்கினார்

எப்போதும், எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பவர் திரு. ஜி.டி.நாயுடு. காலத்தின் ஒரு நிமிடத் துளியைக் கூட வீணாக்க மாட்டார். அதனால்தான், பொறியியல் துறையில் கல்வி கற்றிடும் மாணவர்களது இன்சினியரிங் படிப்பை, திரு. நாயுடு முதல்வராக இருந்தபோது இரண்டாண்டாக மாற்றினார். ஓராண்டு கால உழைப்பை மாணவர்கள் வேறு எதற்காவது பயன்படுத்தி முன்னேற்றம் பெறட்டுமே என்ற நோக்கோடு அவர் அவ்வாறு குறைத்தார். ஆனால், அப் பள்ளி நிர்வாகம் அரசுவிடம் ஒப்படைக்கப் பட்ட பிறகு, மீண்டும் பொறியியல் படிப்பு மூன்றாண்டாக மாற்றப்பட்டு விட்டது.

ஆங்கில அரசு மீண்டும் மூன்றாண்டாக்கியதைக் கண்ட திரு. ஜி.டி. நாயுடு, இரண்டாண்டே பொறியியற் துறைக் கல்விக்கு அதிகமான காலம் ஆகும் என்று கருதி, நாட்டில் கல்விப் புரட்சியை உருவாக்க நினைத்த அவர், ஆறு வாரம் பயிற்சி வகுப்பு ஒன்றைத் துவக்கினார்.

என்ன அந்த
ஆறுவாரப் பயிற்சி?

'கோபால் பாக்' என்ற கட்டித்தில் திரு. ஜி. டி. நாயுடு தனது ஆறு வாரம் பயிற்சி வகுப்பை ஆரம்பித்தார். ஆறு வாரம் கூடத் தேவையில்லை என்ற அவர், முதலில் மூன்று வாரம் பயிற்சி வகுப்பு என்று அறிவித்துத் துவக்கினார். மறுபடியும் என்ன நினைத்தாரோ, மீண்டும் ஆறு வாரம் பயிற்சி வகுப்பையே நடத்த ஆரம்பித்தார்.

ஓர் இன்சினியர் படிப்புக்கு ஆறு வாரம், மூன்று வாரம் படிப்பு போதுமா 21 நாட்களிலும், 42 நாட்களிலும் இன்சீனியர் படிப்பைப் படிக்க இயலுமா? இந்தியா முழுவதும் பொறியியல் படிக்கும் மாணவர்கள், மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் படிக்கும்போது,