பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

117


திரு.நாயுடு 3 வாரம் 6 வாரம் என்கிறாரே என்று அறிஞர்களே வியந்த நேரமும் உண்டு.

ஆறு வாரம் பயிற்சி வகுப்புகள் கோபால் பாக்கில் நடந்த போது, அறிஞர்கள் சிலர், அடிக்கடி அங்கே சென்று என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே என்று நாயுடு அனுமதியோடு போய்க் கவனித்தார்கள்.

ஆறே வார இன்சினியரிங் கல்வி அருமையாக நடப்பதை அந்த அறிஞர்கள் பார்த்தார்கள். இந்தியா முழுவதும் உள்ள கல்லூரிகளில் நடைபெறும் பொறியியற் கல்வியில், ஏட்டுப் படிப்புக்கே முதலிடம் கொடுக்கிறார்கள் அதாவது, Theoryக்கே வேலையில்லை, எல்லாம் நேரடிப் பயிற்சிக் கல்விதான். அதாவது, Practical படிப்புதான் இங்கே முக்கியமாகக் கற்பிக்கப்படுகிறது. நேரடிக் கல்வி என்றால் எப்படி?

பொறியியல் துறை மாணவர்கள் இங்கே இயந்திரங்களுக்கு இடையேதான் உலவவேண்டும். ஒவ்வொரு இயந்திரங்களின் செயல்கள் என்னென்ன? எப்படியெப்படி இயக்குவது? எதை யெதைச் செய்யலாம்? என்பதே அவர்களது. பொறியியல் படிப்பு ஆகும். மாணவர் காலை 7 மணிக்கு கோபால் பாக் வகுப்புக்கு வந்து விடுவார்கள். இரவு நேரங்களிலும் இயந்திரர் பயிற்சிகளைப் பெறுவார்கள்.

மோட்டார், வானொலி, கடிகாரம் பாக்டீரியாலஜி Bacteriology முதலிய துறைகளில் கோபால் பாக்கில் ஆறு வாரம் பயிற்சிகள் அதாவது Refresher course அளிக்கப் படுகின்றன.

பேராசிரியர் மட்டுமல்லர்
நாயுடுவும் வகுப்பு நடத்துவார்!

இந்தக் கல்வித் துறைப் பயிற்சியாளர்கள் யார் யார் தெரியுமா? பொறியியல் துறையில் மிகச் சிறந்த அனுபவம் பெற்ற பேராசிரியர்கள். விரிவுரையாளர்கள், தொழில் வல்லுநர்கள் போன்ற திறமை பெற்றவர்களே இங்கே பாடம் எடுக்கிறார்கள்.

இவர்கள் எல்லாரும் தொழில் கல்வி வளர பெரும்பாடு படும் பேரறிவாளர்களாகத் திகழ்கின்றார்கள். இந்த பெரும் கல்வி