பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

119


தலைமையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. சர். சி. வி. ராமன் அந்த விழாவிலே ஆற்றிய சொற்பொழிவை இந்தியக் கல்வி உலகம் பாராட்டியது. இதோ சர். சி.வி. ராமன்.பேசுகிறார் - கேளுங்கள்!

சர். சி.வி. இராமன்
பரிசளிப்பு உரை!

அன்பார்ந்த பொறியியல் துறை மாணவர்களே! சுருக்கமாக் கூறுவதானால், கல்வித் துறையில் கற்றுக் கொடுக்கும் பாடங்களை விட, அவற்றால் விளையும் பயன்கள்தான் முக்கியமானது சுருங்கிய காலத்தில் ஆழ்ந்து பயின்று. நிறையக் கற்க வேண்டும் என்று கூறுபவர் ஜி. டி. நாயுடு. அவருடைய கொள்கையை நான் மனதார வரவேற்கின்றேன்; ஆதரிக்கின்றேன்.

மாணர்வகளுக்கு நேரிடைப் பயிற்சி, அதாவது Practical ஒர்க்ஸ் மிக மிகத் தேவை. அந்த முறையில்தான் எதையும் சீராக, ஒழுங்காகக் கற்க முடியும். உதாரணமாக, தண்ணில் நீந்தும் நீய்ச்சலைப் பற்றி எத்தனை நூற்கள் படித்தாலும், நீய்ச்சல் வராது. நீருக்குள் குதித்துப் பயிற்சி பெற்றால்தான் நீய்ச்சல் கைகூடும்.

அதுபோல்தான் மோட்டார் தொழிலும்,- வானொலி போன்ற பொறியியற் கல்விகளும் அவற்றோடு எனது நண்பர் ஜி.டி. நாயுடு எல்லா நேரமும் போராடிக் கொண்டிருக்கிறார்! அவர்தான் உண்மையான பொறியியல் ஆசிரியர் அவருடைய கொள்கைதான் நடை முறைக்கு ஏற்றது, உகந்தது.

காலப் போக்கில் ஜி.டி.நாயுடுவின் கல்விக் கொள்கைகளை மக்கள் ஒப்புக் கொள்வார்கள். அவர் சொல்லுகின்ற நேரடிப் பயிற்சி முறை என்பது யாராலும் புறக்கணிக்கப்பட முடியாதது. ஆனால், நம் நாட்டில் இன்று பெரிதும் காணப்படுவது ஏட்டுக் கல்விதான். அது பயனற்றது என்று நாயுடு அவர்கள் கூறுகின்ற பொழுது, நான் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

நான் ஒரு விஞ்ஞானி என்ற முறையிலும், பல்கலைக் கழகத்தில் படித்தவன் என்ற முறையிலும் கூறுகிறேன், நேரடிப் பயிற்சிதான் முதலில் தேவை. அதற்குப் பின்னர்தான் ஏட்டுக் கல்வி, என்பது எனது கருத்தாகும்.