பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

141


தாமஸ் ஆல்வாய் எடிசன் என்ற புகழ்பெற்ற விஞ்ஞானியால் கைவிடப்பட்ட Vote Recording Machine, அதாவது தேர்தலின் போது வாக்குகளைப் பதிவு செய்யும் இயந்திரத்தைக் கண்டு பிடித்தார். அது தற்போதையை தேர்தல்களில் ஆமை போல அமலாகி வருவதைப் பார்க்கின்றோம். 2004-ஆம் ஆண்டு முதல் அந்த முறை முயலாகவும் செயற்படக் கூடும்.

நாயுடு செய்த சித்த
மருத்துவ ஆராய்ச்சி!

அதற்கடுத்து திரு. ஜி.டி. நாயுடு அவர்கள், மூலிகைகளை ஆராய்ந்து மருந்துகளைக் கண்டுபிடிக்கும் சித்த வைத்தியராகவும் மாறினார். எப்போதும் அவர் உழைத்துக் கொண்டே இருப்பதற்காகத் தான் பிறவி எடுத்தாரோ என்னவோ! அந்த மாமேதையான திரு. நாயுடு அவர்கள் எப்படியோ பல்துறை அறிவு பெற்ற ஒரு விந்தையான மனிதராக நடமாடினார்.

இத்தகைய மனிதரைப் போன்றவர்களால் தான். அவர்கள் பிறந்த பூமி,தனது வளம் மிக்க விளைச்சலில் குறைவு படாமல், முப்போகம் விளையும் பொன் மண்ணுகப் பொலிவு பெற்று திகழும் என்று நமது பேரறிவுப் பெருமான் திருவள்ளுவர் பெருமையோடு கூறுகிறாரோ என்று நாம் எண்ணி மெய்சிலிர்க்க வேண்டியிருக்கிறது! அத்தகைய புகழை நாட்டி வந்தவர் நமது ஜி.டி.நாயுடு அவர்கள்.

ஜி.டி.நாயுடு அவர்கள் சிறந்த ஒரு சித்த வைத்திய வித்தகராகவும் விளங்கினார். அதற்கு என்ன சான்று என்று வாசகர்களாகிய நீங்கள் கேட்கின்றீர்களா?

சித்த வைத்தியம் பேராசிரியர் என்று சித்த வைத்தியக் குழுவினர்க ளால் பாராட்டிப் போற்றி பட்டம் வழங்கப் பெற்ற ஜி.டி. நாயுடு ஜெர்மன் நாட்டுக்கு 1958, 1959-ஆம் ஆண்டுகளில் சென்றார்.

மேற்கு ஜெர்மன் நாட்டில் 'ஸ்டர்க்கார்ட் என்ற ஒரு நகர் உள்ளது. அந்த நகரில் மிகச் சிறந்த மருத்துவர்களும், தொழிலதிபர்களும் வாழ்கின்ற புகழ்பெற்ற நகரமாகும்.

அந்த நகரில் உள்ள மருத்துவர்கள், 1.3.1958 - அன்றும் 19.1.1959 - அன்றும் இரண்டு மாபெரும் மருத்துவ நிபுணர் கூடும்