பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


சிறப்புக் கூட்டங்களைக் கூட்டி, திரு.ஜி.டி.நாயுடு அவர்களைச் சித்த வைத்திய முறைகள் என்ற தலைப்பில் சொற்பொழிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்கள்.

மருத்துவ மேதைகள் குழுமியிருந்த அந்த ஜெர்மன் நாட்டின் புகழ்பெற்ற ஸ்டார் கார்ட் சொற்பொழிவுகளைச் சுருக்கி கீழே கொடுத்திருக்கிறோம்.

இதோ ஜி.டி.நாயுடு
பேசுகிறார் :

அன்பார்ந்த ஸ்டார் கார்ட் மெடிக்கல் கழகத்து மருத்துவ மேதைகளே!

இந்தியாவில் இப்போது மூன்று பழைய மருத்துவ முறைகள் வழக்கில் இருக்கின்றன.அவை,சித்தவைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி வைத்தியம் என்ற மருத்துவ முறைகளாகும்.

இந்த மூன்று மருத்துவ முறைகளில் மிகவும் பழைமையானவை சித்தவைத்தியம் தான். அதன் வயது 4000 ஆண்டு களுக்கும் மேற்பட்டதாகும். சித்தர் பெருமக்களது சிந்தனை முதிர்ச்சிகளாலே உருவான முறையாகையால் இந்தியத் தென்னாட்டில் பெரும் அளவில் இந்த வைத்திய முறை கையாளப்பட்டு வந்தது.

பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அந்த சித்த வைத்திய முறை வட இந்தியா சென்றது. அதற்குப் பின்னர் அங்கிருந்து சீன நாட்டிற் குள் நுழைந்தது. அராபிய நாடுகளிலும் அந்த வைத்திய முறை பரவியது.

யுனானி முறை அத்தகைய வைத்திய முறை அன்று. அது பெரும்பாலும் வட நாட்டில் மட்டுமே இங்குமங்கும் பரவியது. ஆனால், இந்த யுனானி வைத்திய முறை மற்ற மருத்துவ முறைகளைப் போல, விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப் படவில்லை. ஒரே நோய்க்குப் பல மருந்துகள், பல விதங்களில், ஒவ்வொரு மருத்துவராலும் செய்யப்படுகின்றன.

விஞ்ஞான முறைகளிலே மற்ற மருத்துவ முறைகள் முன்னேறி இருக்கும்போது, சித்த வைத்தியம் கடந்த முன்னுாறு ஆண்டுகளாக எந்தவித முன்னேற்றமும் பெறாமல் இருக்கின்றது.