பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

143



எந்த ஒரு மருந்தும் ஒரே குறிப்பிட்ட முறையில் செய்யப் பட்டால், அல்லாது நன்மை கொடுக்காது. ஆராய்ச்சிகள் மேலும் செய்து, தொடர்ந்து முயற்சித்து கொண்டே இருந்தால், நீரிழிவு, ஆஸ்துமா,வெட்டை, புற்றுநோய்,காசம்,இருதயநோய் போன்ற நோய்களுக்கு மலிவான விலையில், அருமையான மருந்துகள் சித்த வைத்தியத்தில் கண்டு பிடிக்க முடியும்.

அது போன்ற ஆராய்ச்சிகளுக்கு உரிய இடம் தென் இந்தியாவே ஆகும். ஏனென்றால், அங்குள்ள மலைகள், சமவெளிகள், தட்ப வெட்ப சூழ்நிலைகள் முதலியன,மருந்துச் செடிகளையும், மூலிகைகளை வளர்ப்பதற்கும்.ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துவதற்கும் பொருத்தமான,சிறந்த இடமாக இருக்கின்றது.

சித்த வைத்தியம் மிக பழமையானதாக இருந்தும், அதுமிக எளிமையான மருத்துவமாக இருந்தும்கூட, அதைப் பற்றி உலகம் இன்னும் உணரவில்லை, உணர்த்தப்படவில்லை,காரணம்,சித்த வைத்தியத்தின் முன்னோர்கள் அதைத் தெளிவாகப் பிற்காலச் சந்ததிகள் புரிந்து பின்பற்றுமாறு எழுதி வைக்கப்படவில்லை, மற்றவர்களுக்கும் சித்த வைத்தியத்தைப் பற்றி எடுத்துக் கூற முடியவில்லை என்பதே காரணம் ஆகும்.

சித்த வைத்தியத்திற்குத் தேவையான மருந்துகள் எல்லாமே மூலிகைச் செடி,கொடி,மரங்களில் இருந்தே கிடைக்கின்றன. ஒவ்வொரு செடி கொடி மரங்களின் இலைகளும்,பூவும்,பிஞ்சும், காயும், தண்டும் வேரும்,பட்டையும், கொட்டைகளும், ஒவ்வொரு நோய்க்கும் பயன்படுபவையே என்பதை உலகம் உணர வேண்டும்.

வேப்பமரம் சிறந்த
சித்த வைத்திய மரம்!

குறிப்பாக, வேப்பங்குச்சியை எடுத்துக் கொள்வோம். அது பல்லைத் தூய்மையாக்கி,பற்கிருமிகளைப் போக்கப் பயன்படுகின்றது. அது போலவே அதன் இலைகள், பூ, பட்டைகள், கொட்டைகள், எண்ணெய், போன்றவை ஒவ்வொரு நோய்க்குரிய ஒவ்வொரு மருத்துவ மருந்தாகவும் பயன்படுகின்றது.

உணவு உண்ட பின்பு வெற்றிலையை வாய்மணக்கத் தாம்பூலமாகப் போடுகின்றார்கள் எங்கள் நாட்டில். அந்த வெற்றிலை