பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


உண்ட உணவை செரிமானம் செய்யும் மருந்தாகவும் பயன்படு கின்றது. ஆடா தோடா என்ற இலை, ஆஸ்த்துமா எனும் நோயைக் குணப்படுத்துகின்றது.

இவ்வாறு சிறந்த பயன் தரும் சித்த வைத்திய முறைகள், தென்னிந்தியாவிற்குள் மட்டும் புகழ்பெற்றுள்ளது.

இந்தியா வரும் ஜெர்மானியர்
தமிழ் நாட்டிற்கும் வர வேண்டும்!

உலக மக்களும், ஜெர்மானிய மக்களும் இந்தியாவிற்கு வரும்போது, வட இந்தியாவைப் பார்த்து விட்டோம் என்று திரும்பி விடாமல், தமிழ் நாட்டிற்கும் நீங்கள் வரவேண்டும். வந்தால்தான் இந்த மருந்துகள் வளரும் மூலிகை மலைகளின் இயற்கைச் சக்தியை உங்களால் உணர முடியம்.

மேற்கு ஜெர்மனியிலே உள்ள ஸ்டார்கார்ட் நகர மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர்களது அறிவும், ஆராய்ச்சியும் சித்த மருத்துவ முறைகளுக்குப் பயன்படுமேயானால், அந்த சித்த வைத்திய முறை மருத்துவ உலகில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியே தீரும் என்பது உறுதி.

கோவையில் நான் தொழிலாளர் நலச் சங்கம் என்ற ஒன்றைத் துவக்கி இருக்கிறேன். அதன் சார்பாக, மனித சமுதாயத்திற்குரிய தேவையான பல பிரச்னைகளை ஆராய்கின்றோம்.அவற்றில் ஒன்று தான் இந்த மருத்துவ ஆராய்ச்சி.

எனக்கு உதவியாக இருந்து பல மருந்துகளைக் கண்டு பிடிப்பதில் எனக்குத் துணையாக இருப்பவர் டாக்டர் வி.பி.பி.நாயுடு ஆவார். அவர் உலகம் முழுவதும் சுற்றிப் பல்வேறு மருத்துவ மனைகளில் பணியாற்றியப் பரந்த அனுபவம் உடையவர்.

இப்போது நாங்கள் இருவரும் செய்து வருவதைப் போன்ற மருத்துவ ஆராய்ச்சிகளை, எங்களுக்கு முன்பே 50 அல்லது 100 ஆண்டுகளுக்கு முன்பே யாரேனும் செய்திருப்பார்களானால், இன்று வரை எண்ணற்ற அரிய மருந்துகளைக் கண்டு பிடித்திருக்கக் கூடும்.