பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
14. மாணவர்களுக்கு ஜி.டி.நாயுடு ஆற்றிய ஒழுக்க அறிவுரைகள்!
"சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான்; அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது"

என்கிறது பொய்யில் புலவரின் தமிழர் மறை அதாவது, தான் எண்ணியதைப் பிறர் ஏற்கச் சொல்லும் ஆற்றல் உள்ளவன், கேட்பாரை நோக்கச் சொல்வது சிரமமானது என்றாலும், சோர்வு இல்லாதவன், கேட்பவர் பகைஞர் என்றாலும் அஞ்சாதவன். இவன்மீது பகை கொண்டு, இவனை வெல்வது எவர்க்கும் கடினமே!

மேற்கண்ட அறிவுரைக்கு ஏற்றவாறு,திரு.ஜி.டி.நாயுடு அவர்கள், ஒரு சிறந்த நாவன்மை உடையவராக, சொல்லாற்றல் பெற்றவராக விளங்கினார்.

அமெரிக்கா, ஜெர்மன், இங்கிலாந்து, இரழ்சியா, சுவிட்சர்லாந்து, போன்ற அயல் நாடுகளின் சுற்றுப் பயனங்களில் திரு.நாயுடு அவர்கள் பேசும் போதெல்லாம், அழகான இங்லிஷ் மொழியிலேயே கோர்வையாகவும், சுருக்கமாகவும், தெளிவாகவும் கேட்போர் வியக்கும் வகையில் அவர் பேசினார்.

சாதாரணமானவர்கள் முன்பு பேசும் ஆங்கிலத்துக்கும், புகழ்பெற்ற அறிவியலார், மருத்துவர், தொழிலதிபர், பொறியியல் நிபுணர், வணிகப் பெருமக்கள் ஆகியோர் முன்பு உரையாடுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

என்ன வித்தியாசம் என்கிறீர்களா? தான் சொல்ல வந்த கருத்துக்களைக் கோர்வையாகக் கூறும் திறன், மொழிப் புலமை