பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


மாணவப் பருவத்தில் இயற்கையாகக் காணப்படும் ஊக்கமும், தைரியமும் தீய பழக்கத்தைச் சுலபமாக ஒழித்துவிடும் பருவமாகும்.

இளைஞர்கள் படித்துப் பட்டம் பெறும் காலத்தில் அறிவு முதிர்ச்சி பெறுகிறார்கள். அப்பொழுது அவர்களுக்கு நன்மை, தீமைகள் எவை என்பதைப் பகுத்தறியும் ஆற்றல் உருவாக வேண்டும். தீயவற்றை நீக்கி நல்லனவற்றைப் பின்பற்றத் தெரிய வேண்டும்.

மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய தேர்வில் முதல் வகுப்பிலோ அல்லது இரண்டாம் இடத்திலே தேறாவிட்டாலும், அல்லது தேர்ச்சியே பெறா விட்டாலும் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.

ஆனால், தீமை தரும் பழக்கங்களைக் கைவிட்டு விட்டோம் என்ற நம்பிக்கையோடும், துன்பங்களை எதிர்நோக்கக் கூடிய மனோ திடத்தோடும் - நேர்மையான செயல்கட்குப் போராடும் உள்ளத் தோடும், ஆழ்ந்து நோக்கிப் பிரச்சனைகளை ஆராயும் தன்மை யோடும் - நீங்கள் கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும். அப்போதுதான் நீங்கள் உங்களுடைய வாழ்நாட்கள் முழுவதும் எல்லாத் துறைகளிலும் வாகை சூடுவீர்கள்.

மாணவர்கள் பெறும் பட்டங்கள் மட்டும் உங்களுடைய வாழ்க்கையின் எல்லா நன்மைகளையும் வழங்கிவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள். இங்கே நீங்கள் முதுகலைப் பட்டம் எனப்படும் எம்.ஏ. பட்டம் பெற்றிருக்கலாம். அல்லது பெறலாம். இந்தப் பட்டம் உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு ஓர் ஆரம்பப் பாடமே ஆகும்!

கல்லூரிக்கு வெளியே நீங்கள் கற்கவேண்டிய பாடங்கள் ஏராளமாக இருக்கின்றன. அந்தக் கல்விக்கு இந்தப் பட்டமும் படிப்பும் முதல் படியாகத்தான் அமையும்.

வெளியுலக வாழ்க்கை என்பது ஒரு மொழி போன்றதே. அந்த மொழியை உணர, நீங்கள் படித்தக் கல்லூரிப் படிப்பு உங்களுக்கு எமுத்துக்களாகவே பயன்படும். அந்த மொழியால் நீங்கள் வெற்றிகண்ட உங்களுடைய வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள