பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

167


துறையிலும், தொழிற் துறையிலும் முன்னேற்றம் அடைந்ததை நேரில் பார்த்தவர்.

இந்திய மக்களும், குறிப்பாகத் தமிழ்ப் பெரு மக்களும், மேநாடுகளைப் போல பொருளாதாரத் துறையில் முன்னேற வேண்டும். தொழிற் துறையில் வளர்ச்சிப் பெற வேண்டும் என்ற ஆவல் கொண்டார்.

ஏராளமான தொழிற்சாலைகளை அத் துறையில் அவரே உருவாக்கி, நம் நாட்டு மக்களுக்குரிய வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தவர் நாயுடு என்றால், இது ஏதோ மிகைப் படுத்திக் கூறுவதன்று.

தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம் முன்னேற வேண்டும் என்ற கருணை உள்ளத்தால், தொழிலாளர் நலச் சங்கம் என்ற ஓர் அமைப்பை உருவாக்கினார் ஜி.டி. நாயுடு அவர்கள். அதன் தலைவராகவும் அவரே பணியாற்றினார்.

சங்கத்தை உருவாக்கி விட்டால் மட்டும் போதுமா? தொழிலாளர்கள் வாழ்க்கை அதனால் முன்னேறி விடுமா? என்று திரு. நாயுடு சிந்தித்தார்.

வள்ளல் பாரியைப் போல, பல லட்சம் ரூபாய் பெறுமானம் பெறும் தனது சொத்துக்களை, கோவை வள்ளல் திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் தொழிலாளர் நலன்களுக்காகவே எழுதி வைத்து விட்டார். வள்ளல் பாரி, வறுமையில் வாடி தேடி வரும் கலைஞர்களுக்கு வாரி வழங்கிய அன்பு உள்ளம் போல, கோவை வள்ளல் ஜி.டி. நாயுடு அவர்களும் தனது சொத்துக்களைத் தொழிலாளர்களுக்கு வாரி வழங்கினார்.

கல்வித் துறையில் தொழிற் புரட்சியை உருவாக்க எண்ணிய திரு. நாயுடு அவர்கள், இரண்டு தொழிற் கல்லூரிகளை ஏற்படுத்தினார். இவை கல்விக்காக அவரால் வழங்கப்பட்ட கொடை உள்ளமல்லவா?

அது மட்டுமா? கலைக் கல்லூரிகள் கட்டடங்களை உடைத்தெறிய வேண்டும் என்று வள்ளல் அழகப்பர் முன்பு முழக்க மிட்ட கொடை வள்ளல் நாயுடு, அந்தக் கலைக் கல்லூரிகளிலே கூட