பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

185


அவருடைய கண்கள் காந்த சக்தி படைத்தவை. அவரோடு தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரையும் அவர் கவரக் கூடியவர். எந்தப் பொருளையும் அவர் கூர்மையாக உற்று நோக்குகிறார். அவரது கண்கள் குறிப்பின்றி அலைவதில்லை. அவர் ஓர் அதிசய மனிதர் ஆவார்.

அமெரிக்கத் தொழிலதிபர்
எப். டிரேப்பர் கூறுகிறார்!

அமெரிக்காவின் சிகாகோ நகரிலே உள்ள மின்-தொழில் அதிபரான எப். டிரேப்பர் எழுதுகிறார் :

"திரு. நாயுடு அவர்களே! தாங்கள் சிகாகோ நகருக்கு வருகை தந்ததைப் பெரிதும் மதித்துப் பாராட்டுகிறேன். தங்களோடு நான் அனுபவித்த சில மணி நேரங்களை என் வாழ்வின் பொன்னான நேரமாக எண்ணி மகிழ்கின்றேன். தங்களிடம் இருந்து எனக்குத் தேவையான அனுபவங்களை நான் ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். உங்களுடைய வாழ்க்கைப் பாதையை ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது பின்பற்றக் கூடிய ஆற்றலும், மன உறுதியும் எனக்கு ஏற்படும்” என்று நம்புகிறேன்.

ஒரிசா மாநிலத்தின் -
திட்டத் துறை செயலர்!

ஒரிசா மாநிலத்தின் அரசு திட்டத் துறை செயலாளார் கட்டாக் நகரிலே இருந்து நாயுடுவைப் பாராட்டி எழுதும்போது :

"நான் தங்களது கல்வி நிலையங்களைப் பார்வையிட்டு வந்தது முதல், தங்களிடம் மோட்டார், வானொலித் துறைகளில் ஆறு வாரம் பயிற்சி பெறுவதற்குச் சில மாணவர்களைக் கட்டாக் நகரிலே இருந்து அனுப்ப வேண்டும் என்று எங்கள் அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தேன். அரசு எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, மாணவர்கள் சிலருக்கு உதவிச் சம்பளம் வழங்க முன் வந்திருக்கின்றது.

அத்துடன், உங்களால் எத்தனை மாணவர்களுக்கு இந்த ஆண்டில், பயிற்சி தர முடியும் என்பதையும் விசாரிக்கச் சொல்லி இருக்கிறது. ஒவ்வொரு பாடத்திற்கும் மூன்று மாணவர்கள் வீதம்