பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

187


விட்டீர்கள். பிறகு உங்களைப் பற்றி விசாரித்ததில், சில நண்பர்களிடம் இருந்து நீங்கள் மைக்கிரோஸ் கோப், மைக்ரோ புரொஜெக்டர் கார் முதலியவற்றை நன்கொடைகளாக வாங்கிக் கொண்டிருப்பதாக அறிந்தேன்.

"ஆகவே, நீங்கள் என்னிடமிருந்தும், எதையாவது பெற்றுக் கொண்டே தீர வேண்டும். நீங்கள், 'பிளாக் பாரஸ்ட் கடையில் வாங்கியுள்ள எல்லாக் கடிகாரங்களுக்கும் உரிய விலையை நானே கொடுத்து விடுகிறேன்".

'உங்களுடைய அதிசயமான மருந்தால் காப்பாற்றப்பட்ட ஓர் உயிருக்கு - இந்தத் தொகை சிறிதும் ஈடாகாது! உங்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்'.

நாயுடு நாட்டின்
தேசிய சொத்து!

ஜி.டி. நாயுடு அவர்களை மேற்கண்டவாறு, இந்தியாவும், உலக நாடுகளும் பாராட்டிப் போற்றிப் புகழ்ந்து இருக்கின்றன. அந்தப் பெருமகனை, செயற்கரிய செயல்களைச் செய்து காட்டி வெற்றி பெற்றிட்ட தமிழ்நாட்டுத் தொழிலியல் துறை விஞ்ஞானியை, கல்வியிலே புரட்சியைப் புகுத்திய சான்றோனை அவர் உயிரோடு வாழ்ந்திருந்த காலத்திலேயே நாம் நன்கு பயன்படுத்திக் கொண்டு பாராட்டியிருக்க வேண்டும். செய்தோமா? நன்றி காட்டினோமா?

திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் நம் நாட்டின் தேசீய சொத்து என்று நம்பினோமா? கள்ளம் கபடமற்ற அந்தப் பதுமையான விஞ்ஞானியை, கட்சிகளை எல்லாம் கடந்து நின்று அந்த தமிழ்ப் பொது மகனை, இந்தியப் பெரு நாடும், தமிழ்த் திருநாடும் பயன்படுத்திக் கொண்டு, இந்திய மக்கள் வாழ்வை முன்னேறச் செய்தோமா? நாம் என்ன கைம்மாறு செய்தோம் அவர் தம் தீர்க்க தரிசனமான அறிவுக்கு?

போனது போகட்டும். இனிமேலாவது, வரும் இளைய தலைமுறைகளும், அவர்களைச் சார்ந்த பொது மக்களும் நன்றாக, செம்மையான வாழ்வு வாழ வைக்க விரும்புவோமா?